எனக்கு நரம்பு தளர்ச்சியா? அந்தாளு டாக்டரான்னே தெரியல - வெளுத்து வாங்கிய நடிகர் விஷால்

By subhashini · 18/1/2025

தன்னுடைய உடல்நலம் குறித்து பரவிய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விஷால் பேசி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சுந்தர்.சி மற்றும் விஷால் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தான் மதகஜராஜா. இந்த படத்தில் விஷாலுடன் சந்தானம், சோனு சூட், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, மணிவண்ணன், மனோ பாலா, மயில்சாமி, சிட்டிபாபு உட்பட பலர் நடித்து இருந்தார்கள். ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது.

இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த படம் 2013 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகுவதாக இருந்தது. ஆனால், சில பிரச்சனை ஏற்பட்டதால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. சமீபத்தில் தான் இப்படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி மதகஜராஜா படம் வெளியாக இருப்பதாக அறிவித்திருந்தார்கள். சோசியல் மீடியாவிலும் இப்படம் குறித்து அதிகமாக பேசப்பட்டு வந்தது. அதன் பின் இந்த படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடைபெற்று இருந்தது.

மதகஜராஜா படம்:

அப்போது விஷால் மேடை ஏறி பேசிய போது அவருடைய கை, கால்கள் நடுங்கி இருந்தது. குரலிலும் நடுக்கம் தெரிந்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் விஷாலுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி ஆயிட்டாரு? என்று கேட்டு இருந்தார்கள். பின், விஷாலுக்கு சாதாரண வைரல் காய்ச்சல் தான் என்று அவர் தரப்பில் கூறி இருந்தார்கள். தற்போது விஷால் நன்றாக இருக்கிறார். மேலும், பொங்கலை முன்னிட்டு இப்படம் கடந்த 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. மற்ற பொங்கல் ரிலீஸ் படங்களை காட்டிலும் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் இப்படம் பெற்றுள்ளது.

வெற்றி விழா:

இந்த நிலையில் இந்த படத்தினுடைய வெற்றி விழா சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இந்த விழாவில் இயக்குனர் சுந்தர்.சி, விஷால், விஜய் ஆண்டனி உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது விழாவில் பேசிய விஷால், பொதுவாகவே நிலநடுக்கம் வந்தால் நியூஸ் வரும். அடுத்த நாளே எல்லோரும் மறந்திடுவார்கள். ஆனால், விஷால் உடைய நடுக்கம் வந்து உலகம் முழுவதும் ஃபேமஸ் ஆனது. விஷாலுடைய ஹெல்த்துக்கு என்ன? விஷால் நல்லா இருக்கணும், திரும்பவும் அவர் வரணும் என்று உலகம் முழுவதுமே நிறைய பேர் கண்ணீர் விட்டிருந்தார்கள்.

விழாவில் விஷால் சொன்னது:

அதன் மூலம் எத்தனை பேர் என்னை நேசித்தார்கள் என்று தெரிந்து கொண்டது. பிடிக்காதவர்களுக்கும் என்னை பிடிக்க ஆரம்பித்தது. ஆர்யாவை பற்றி சொல்லும்போது கண் கலங்கிவிடும். எல்லோருக்கும் நண்பர்கள் இருப்பார்கள். இப்படி ஒரு நண்பன் கிடைத்தது பாக்கியம். நான் ஏதோ வகையில் புண்ணியம் செய்திருக்கிறேன். அன்று மருத்துவர்கள் ஃபங்ஷனுக்கு போக வேண்டாம் என்று சொன்னார்கள். காய்ச்சல் அதிகமாகும், நடுக்கம் வரலாம் என்றெல்லாம் சொன்னார்கள். நான் கண்ணாடி முன்பு போனேன். அப்போது சுந்தர்.சி சார் தான் தெரிந்தார். சண்டைக்கோழிக்கு பிறகு எனக்கு இந்த படம் தான் ரொம்ப பிடித்த படம் என்று சுந்தர்.சி சொல்வார்.

https://www.youtube.com/watch?v=nYMoRFavkgQ

விமர்சித்தவர்களுக்கு கொடுத்த பதிலடி:

எப்போது வந்தாலும் மதகஜராஜா பிளாக்பஸ்டர் என்று சொல்வார். இந்திய திரைப்பட வரலாற்றிலேயே 12 வருடங்கள் கழித்து ஒரு படம் வந்து பிளாக்பஸ்டர் ஆனது மதகஜராஜா படம் தான். 12 வருடம் கழித்து வெளியான ஒரு படத்தை கோலாகலமாக மக்கள் தியேட்டரில் கொண்டாடுகிறார்கள். கடவுளுக்கு தான் நன்றி சொல்லிக்கொள்ள வேண்டும். அதேபோல் விஷால் போதைக்கு அடிமையாகி இருக்கிறார், நரம்பு தளர்ச்சி என்று டாக்டர் கூட ஒரு பேட்டி கொடுத்தார். அந்த ஆள் டாக்டரா? இல்லையா? என்று கூட எனக்கு தெரியாது. கற்பனை உலகத்தில் இருக்கிறார். அதில் பாசிட்டிவான விஷயம் என்னன்னா என்னை எத்தனை பேர் விரும்புறாங்க என்று தெரிந்தது. சுந்தர். சி சார் கூட படம் பண்ணும் போது எனக்கு உடல் நிலையும் மனநிலையும் நன்றாக இருக்கும். ஒரு இயக்குனர் 30 வருடம் நீடிக்கிறது சாதாரண விஷயம் இல்லை. அவருக்கு பெரிய கைத்தட்டல்கள் என்று பல விஷயங்களை மனம் திறந்து பேசி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full