அவருடைய திருமணத்திற்கு பின்னர் தான் என் திருமணம் - விஷால் புதிய முடிவு.

By subhashini · 16/9/2023

திருமணம் குறித்த கேள்விக்கு நடிகர் விஷால் அளித்திருக்கும் பதில் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஷால். இவரை புரட்சி தளபதி என்று பலரும் அலைகிறார்கள். பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகன் தான் விஷால். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

அந்த வகையில் சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான படம் லத்தி. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இதை தொடர்ந்து தற்போது நடிகர் விஷால் அவர்கள் “மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கிறார். இப்படத்தை எஸ்.வினோத் குமார் தயாரித்து இருக்கிறார். ஜி.வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

விஷால் படம்:

இவர்களுடன் இந்த பட்டத்தில் எஸ் ஜே சூர்யா, செல்வராகவன் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஷாலின் இந்த படம் வெற்றியைத் தந்திருக்கிறது. இதனை அடுத்து விஷால் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி இவர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வந்தாலும் இன்னும் இவருக்கு திருமணம் ஆகாது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை கொடுத்திருக்கிறது.

விஷால் நிச்சயதார்த்தம்:

பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை என பலருமே விஷாலுக்கு எப்போது திருமணம் என்று கேட்டுக் கொண்டே வருகிறார்கள். இது குறித்து கோலிவுட் வட்டாரத்தில் ஒரு சர்ச்சையாகவே இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் சில ஆண்டுகளுக்கு முன்பு விஷால் அவர்கள் அணிசா என்பவரை காதலித்திருந்தார். பின் இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. ஆனால், என்ன காரணம் என்று தெரியவில்லை இவர்கள் திருமணம் நடைபெறவில்லை. இது குறித்து பலருமே கேள்வி எழுப்பினார்கள்.

விஷால் காதல் குறித்த சர்ச்சை:

அதற்கு குறித்து சரியாக பதில் விஷால் தரவில்லை. பின் விஷாலுக்கும் நடிகை லட்சுமி மேனன் இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் வந்து இருந்தது. ஆனால், இருவருமே இதைப் பற்றி எதுவும் பேசவில்லை, பின் விஷால், வரலட்சுமி சரத்குமாரும் காதலிப்பதாக கூறியிருந்தார்கள். ஆனால், இவர்கள் இருவருமே நல்ல நண்பர்கள் என்று சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள். அதற்குப்பின் விஷால் குறித்து எந்த ஒரு காதல் கிசு கிசுவும் சோசியல் மீடியாவில் வெளியாகவில்லை.

திருமணம் குறித்து சொன்னது:

அதற்குப் பிறகு யார் திருமணத்தைப் பற்றி பேசினாலும் அதைப்பற்றி மறுத்துக் கொண்டே வருகிறார். அதோடு நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடித்த பின்பு தான் திருமணம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் விஷாலிடம் திருமணம் குறித்து கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர், என்னுடைய நண்பர் ஆர்யா திருமணம் செய்யட்டும் பிறகு நான் செய்கிறேன் என்று கூறினேன். அவர் திருமணம் செய்த பிறகு மீண்டும் அதே கேள்வியை கேட்டீர்கள். பிரபாஸ் திருமணம் செய்யட்டும் என்று கூட சொல்லலாம். ஆனால், சல்மான் கான் திருமணம் செய்யட்டும் அதற்கு பிறகு நான் செய்கிறேன் என்று சொல்வது தான் இப்போது சரியாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full