ஆயுத பூஜையில் மும்மத வழிபாடுகளையும் மேற்கொண்ட விஷால் - ரசிகர்ளின் கமெண்ட்ஸ்

By subhashini · 25/10/2023

மூன்று மதம் வழிபாட்டை மேற்கொண்ட விஷாலை நெட்டிசன்கள் விமர்சித்து வரும் பதிவுதான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக விஷால் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகன் ஆவார். விஷால் சினிமாவில் நடிகர் ஆவதற்கு முன்பே நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்து இருந்தார். அதன் பின் இவர் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம் செல்லமே.

அதன் பின் நடிகர் விஷால் அவர்கள் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். மேலும், இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர், திரைப்படத் நடிகர் சங்கத் தலைவராகவும் இருந்து வந்தார். இந்த ஆண்டு நடந்த நடிகர் சங்க தேர்தலில் விஷாலின் அணி தான் மீண்டும் வெற்றி பெற்று இருக்கிறது. அதோடு தமிழ் சினிமாவில் புரட்சி தளபதி என்று நடிகர் விஷாலை அழைக்கிறார்கள். இருந்தாலும், விஷால் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

விஷால் நடித்த படம்;

அந்த வகையில் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் மார்க் ஆண்டனி. இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கிறார். இப்படத்தை எஸ்.வினோத் குமார் தயாரித்து இருக்கிறார். ஜி.வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் செல்வராகவன், எஸ் ஜே சூர்யா, அபிநயா, ரிது வர்மா, நிழல்கள் ரவி, Y.G. மகேந்திரன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

View this post on Instagram

A post shared by Galatta Media (@galattadotcom)

விஷால்-ஹரி கூட்டணி:

அது மட்டும் இல்லாமல் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஷாலின் இந்த படம் வெற்றியைத் தந்திருக்கிறது. தற்போது விஷால் நடிக்கும் 34 வது படத்தை இயக்குனர் ஹரி இயக்குகிறார். இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் சவுத் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றது. மேலும், இந்த படம் வித்தியாசமான போலீஸ் கதை என்று கூறப்படுகிறது.

படம் குறித்த தகவ்கள்:

ஏற்கனவே ஹரி- விஷால் கூட்டணியில் தாமிரபரணி, பூஜை படங்கள் வெளியாகி இருந்தது. இந்த இரண்டு படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது மட்டும் இல்லாமல் வசூலையும் பெற்று தந்திருந்தது. இதனை அடுத்து மூன்றாவது முறையாக விஷால்- ஹரி கூட்டணி இணைந்து இருக்கிறது. இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தினுடைய படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் தான் தூத்துக்குடியில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.

விமர்சிக்கும் நெட்டிசன்கள்:

இந்த நிலையில் விஷால் ஆயுத பூஜை கொண்டாடிருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அதாவது, நடிகர் விஷால் அவர்கள் தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து ஆயுத பூஜையை கொண்டாடி இருக்கிறார். மேலும், விஷால் தன்னுடைய அலுவலகத்தில் கொண்டாடப்பட்ட ஆயுத பூஜையில் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் ஆகிய மூன்று மத வழிபாடுகளையும் செய்திருக்கிறார். அதற்கு பிறகு தூய்மை பணியாளர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி இருக்கிறார். இதை தான் நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்து, இதெல்லாம் ஓவரா இல்லையா! எதற்கு இந்த சீனு. ஆக்டிங் ரொம்ப அதிகமாக இருக்கிறது என்றெல்லாம் விமர்சித்து கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full