சௌந்தராவுக்கு இத சொல்லி தான் வீட்டுக்குள் அனுப்பினேன்- பிக் பாஸ் பிரபலம் விஷ்ணு சொன்ன விஷயம்
விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி இரண்டு வாரம் முடிந்து மூன்றாவது வாரம் தொடங்கி இருக்கிறது. இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார்.
இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீட்டின் நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பின் முதல் வாரத்திற்கான எவிக்ஷனில் ரவீந்தர் வெளியேறி இருந்தார். பின் இரண்டாம் வாரத்திற்கான நாமினேஷனில் அர்னவ் வெளியேறி இருந்தார். மூன்றாம் வாரத்திற்கான நாமினேஷனில் ஜாக்லின்,அன்ஷிதா,பவித்ரா ஜனனி,சத்யா,முத்துக்குமரன்,
சௌந்தர்யா ஆகியோர் இடம் பிடித்து இருக்கிறார்கள்.
விஷ்ணு பேட்டி:
மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர் சௌந்தர்யா. இவர் நிகழ்ச்சியில் சேப் கேம் ஆடுகிறார், பெரிதாக எந்த விஷயத்தையும் செய்யவில்லை, சாப்பிட்டு தூங்குகிறார் என்றெல்லாம் போட்டியாளர்களே கூறுகிறார்கள். அதோடு வாரவாரமும் இவருடைய பெயர் நாமினேஷன் பட்டியலியுமே வந்து விடுகிறது. இந்த வாரம் அதிக ஓட்டுகளை பெற்று நாமினேஷனில் சௌந்தர்யா இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் சௌந்தர்யாவின் நண்பரும், முந்தைய பிக் பாஸ் போட்டியாளராக இருந்த விஷ்ணு அளித்த பேட்டியில், இப்போ பார்த்த ரெண்டு வாரத்தில் சௌந்தர்யா ஓகே தான். ஆனால், இன்னும் கேமில் இன்வால்வ்மென்ட் ஆகணும்.
பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து சொன்னது:
அந்த என்வால்வ்மெண்ட் கொடுத்தால் தான் நமக்கு சப்போர்ட் பண்ற ஆடியன்ஸும் ஹாப்பியாகி ஆதரவு கொடுப்பார்கள். நான் நல்லா விளையாடுவேன். ஆனால், எனக்கு வாய்ப்பு வரமாட்டேங்குது என்ற எண்ணத்திலேயே இருக்கிறார். இந்த நிகழ்ச்சியை பொருத்தவரை இப்படி உட்கார்ந்திருந்தால் வேலைக்காகாது. வாய்ப்பை நாம் தான் உருவாக்கணும். வேறு யாருக்காவது போகிறது என்றால் தட்டிப் பறிக்கணும். எனக்குத் தெரிந்து இவங்க ஒரு கம்போட் ஜோன்ல தான் இருக்காங்க. அதை விட்டு வெளியே வரணும். ஒருத்தருடைய இயல்புக்கு மீறி கண்டன்ட் எப்படி தர முடியும் என்று கேட்டால் அந்த இயல்புக்கு பங்கம் வர ஒரு சூழல் அங்கு நிச்சயம் உருவாகும்.
சௌந்தர்யா குறித்து சொன்னது:
அதே நேரம் நிகழ்ச்சிக்கு நேர்மையாக ஹேண்டில் பண்ணாலே கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். சௌந்தர்யா எனக்கு நல்ல தோழிதான். அதனால அவங்க படுற கஷ்டம் மாதிரி சூழ்நிலை நான் தந்திருக்க மாட்டேன். ஆனால், அந்த வீட்டுக்குள் இருக்கும் ஒவ்வொருத்தருமே ஒவ்வொரு மாதிரி இருப்பதால் அந்த மாதிரி சூழல்கள் நிச்சயம் உருவாகும். அதை எதிர்கொள்ள தெரிந்து கொள்ள வேண்டும். அந்த விஷயத்தில் சௌந்தர்யா கொஞ்சம் வீக்காக இருக்கிறாங்க என்றுதான் நினைக்கிறேன். எல்லா பிக் பாஸ் சீசனிலும் சாப்பாடு பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. அதை வைத்து தான் போட்டியாளர்களை டிகர் பண்ண முடியும் என்று நினைக்கிறார்கள்.
விஷ்ணு சொன்ன அட்வைஸ்:
வீட்டில் இருக்கும்போது சௌந்தர்யா சாப்பாட்டில் அரிசி எடுத்துக்க மாட்டார்கள். ஆனால், பிக் பாஸ் வீட்டுக்குள் போன பிறகும் அப்படியே இருக்க முடியாது. அங்கு அரிசி தான் கிடைக்கும். கிடைத்ததை வைத்து தான் சாப்பிட வேண்டும். வேறு வழி கிடையாது. இந்த மாதிரி நிறைய விஷயங்களை புரிந்து கொண்டு விளையாடினாலே டாப் 5ல் வந்துவிடலாம். இங்கு மைண்ட் கேம் எல்லாம் விளையாட முடியாது. நான் போன சீசனில் முதல் நாளில் ஒரு திட்டத்தோடு தான் போனேன். ஆனால், ஒரு வாரத்திற்குள் அது வொர்க் அவுட் ஆகவில்லை என்று தெரிந்து கொண்டு கைவிட்டேன். அதனால் நாம் நினைத்ததெல்லாம் அப்படியே அந்த வீட்டுக்குள் ஒர்க் அவுட் ஆகாது என்று பல விஷயங்களை கூறியிருக்கிறார்.