கடைசிவரை ஒன்னா இருக்கனும் தான் திருமணம் செய்தேன், ஆனால் - விஷ்ணு விஷால் எமோஷனல்
தன்னுடைய விவாகரத்துக்கான காரணம் குறித்து மனம் திறந்து நடிகர் விஷ்ணு விஷால் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஷ்ணு விஷால். இவர் ரஜினி நடராஜ் என்பவரை நான்கு வருடங்கள் காதலித்து 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகனும் உள்ளார். பின் திருமணம் ஆகி 8 ஆண்டுகளுக்கு பின் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதன் காரணமாக 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். பின் விஷ்ணு அவர்கள் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலாவை திருமணம் செய்து கொண்டார். இருந்தாலும், விஷ்ணு விஷால் தன்னுடைய மகன் ஆரியனை கவனித்து கொள்கிறார். அதேபோல் ஜுவாலாவும் ஆரியனை ஏற்றுக்கொண்டார். சமீபத்தில் விஷ்ணு விஷால்- ஜுவாலாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த சந்தோஷமான செய்தியை விஷ்ணு விஷால் சோசியல் மீடியாவில் பகிர்ந்திருந்தார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.
விஷ்ணு விஷால் குறித்த தகவல்:
சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய மகளுக்கு மீரா என்று பெயர் சூட்டி மகிழ்ந்திருந்தார். இந்த விழாவிற்கு நடிகர் ஆமீர்கான் வந்து இருந்தார். தற்போது தன்னுடைய தம்பி ருத்ராவின் நடிப்பில் உருவாகி இருக்கும் ஓ எந்தன் பேபி படத்தை தயாரித்திருக்கிறார். இதன் மூலம் தன்னுடைய தம்பியை ஹீரோவாக சினிமா உலகில் அறிமுகமாக இருக்கிறார். இந்த படம் ஜூலை 11ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன்காக விஷ்ணு விஷால் பல பேட்டிகள் கொடுத்து வருகிறார். அப்படி விஷ்ணு விஷால் அளித்த பேட்டியில் தன்னுடைய முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததற்கான காரணம் பற்றி கூறியிருக்கிறார்.
விஷ்ணு விஷால் பேட்டி:
அதில் அவர், என் முதல் மனைவி நானும் நான்கு ஆண்டுகள் காதலித்தோம். அதற்கு பிறகு தான் திருமணம் செய்தோம். திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் அவளுக்கு கேன்சர் இருப்பது தெரிய வந்தது. இருந்தாலுமே நான் அவளை திருமணம் செய்து கொண்டேன். என்ன நடந்தாலும் கடைசி வரை அவளை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நான் உறுதியாக இருந்தேன். திருமணம் ஆன பின்னர் ஆறு ஆண்டுகள் குழந்தைகள் வேண்டாம் என்றுதான் முடிவு எடுத்தோம். இந்த ஆறு ஆண்டுகளில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அவருக்கு கேன்சர் சிகிச்சையும் கொடுத்து வந்தார்கள்.
விவாகரத்து காரணம்:
அந்த நேரத்தில்தான் சினிமாவில் கொஞ்சம் நான் அதிக கவனம் செலுத்தி இருந்தேன். இதனால் அவள் மீது அக்கறை இல்லை என நினைத்துக் கொண்டார். இதனால் சின்ன சின்ன கருத்து வேறுபாடு எங்களுக்குள் இருக்கும். அதோடு இந்த விவாகரத்து முடியுமே அவள் எடுத்தது தான். நான் வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். ஆனால், அவள் ஏற்றுக்கொள்ளவில்லை. கடைசியில் ராட்சசன் படம் ரிலீஸ் ஆனபோதுதான் எங்களுக்கு விவாகரத்து நடந்தது. அந்த வெற்றியை கூட என்னால கொண்டாட முடியவில்லை. இன்னும் நான் அவளுக்கு செய்து கொடுத்த சத்தியத்திற்காக தான் அவளுடன் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=QeP9kLwLGTg
விஷ்ணு விஷால் திரைப்பயணம்:
இவர் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். மேலும், சமீப காலமாக விஷ்ணு விஷால் அவர்கள் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி மற்றும் FIR ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மோகன்தாஸ். அது மட்டும் இல்லாமல் தன்னுடைய மகன் ஆரியன் பெயரிலும் ஒரு படத்தில் விஷ்ணு விஷால் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இடம் பொருள் ஏவல் என்ற படத்திலும் விஷ்ணு நடித்திருக்கிறார்.