தன் இரண்டாம் மனைவியுடன் தல தீபாவளியை கொண்டாடியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். சமீப காலமாகவே இவர் வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான “ராட்சசன்” திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விஷ்ணு விஷால் ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து 2011 ஆம் ஆண்டு ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகனும் உள்ளார்.

சில ஆண்டுகளாகவே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின் இதன் காரணமாக 2017 ஆம் ஆண்டு ஆண்டு இவர்கள் இருவருக்கும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். திருமணம் ஆகிக் கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆன நிலையில் தன் மனைவி ரஜினியிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டார் நடிகர் விஷ்ணு. இது விஷ்ணு விஷால் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தது.

Advertisement

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் கடந்தசில வருடங்களாக பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் காதலில் இருந்து வந்தார். இதனால் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக கூட சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜுவாலாவை விஷ்னு விஷால் திருமணம் செய்து கொண்டார்.

விஷ்ணு விஷால் தான் விவாகரத்து ஆனவர் என்று பார்த்தால் ஜுவாலாவும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் தான். பேட்மிட்டன் வீராங்கனையான ஜுவாலா, சேத்தன் ஆனந்த் என்ற பேட்மிட்டன் வீரரை கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்.

Advertisement
ஜுவாலா தன் முதல் கணவருடன்

6 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும் பின்னர் 2011 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி விவகாரத்து பெற்று பிரிந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கத்து. இந்த நிலையில் விஷ்னு விஷால் மற்றும் ஜுவாலா இருவரும் தங்கள் தல தீபாவளியை கொண்டாடியுள்ளனர். இருவருக்குமே இது இரண்டாவது தல தீபாவளி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement