தனது காதலி முன்பே இரண்டாம் திருமணம் குறித்து அறிவித்த நடிகர் விஷ்ணு விஷால்.

By Rajkumar · 22/3/2021

தனது இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் மனம் திறந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். சமீப காலமாகவே இவர் வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான “ராட்சசன்” திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விஷ்ணு விஷால் அவர்கள் ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து 2011 ஆம் ஆண்டு ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகனும் உள்ளார்.

சில ஆண்டுகளாகவே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின் இதன் காரணமாக 2017 ஆம் ஆண்டு ஆண்டு இவர்கள் இருவருக்கும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். திருமணம் ஆகிக் கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆன நிலையில் தற்போது தன் மனைவி ரஜினியிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டார் நடிகர் விஷ்ணு. இது விஷ்ணு விஷால் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தது.

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் கடந்தசில வருடங்களாக பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் காதலில் இருந்து வந்தார். இதனால் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக கூட சர்ச்சை எழுந்தது. விஷ்ணு விஷால் காதலியான ஜுவாலா, விஷ்ணு விஷால் மற்றும் தனுக்கு இருக்கும் உறவு குறித்து பிரபல பத்திரிகைக்கு பேட்டிகொடுத்து இருந்தார் . அதில், ஆம் நாங்கள் இருவரும் டேட்டிங் செய்து வருகிறோம் முன்பே சொன்னது போல இதில் மறைக்க எதுவுமே கிடையாது விரைவில் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போகிறோம் திருமண தேதி முடிவு அல்லது இதுகுறித்து ஏற்பாடுகள் நடந்தாலும் நாங்கள் விரைவில் அறிவிப்போம் என்று கூறி இருந்தார்.

ஆனால், ஜுவாலா விஷயத்தில் நடிகர் விஷ்ணு விஷால் தொடர்ந்து மௌனம் சாதித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி ஜுவாலாவின் பிறந்தநாளில் விஷ்னு, ஜுவாலாவை திருமணம் செய்து கொள்வதை உறுதி செய்தள்ளார். ஜுவாலாவின் பிறந்த நாளன்று இருவரும் மோதிரத்தை மாற்றி தங்களது காதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்று இருந்தார் விஷ்ணு விஷால் . இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் நடைபெற்ற 'காடன்' பட நிகழ்ச்சியில் பேசிய விஷ்ணு விஷால், எனக்கும், ஜுவாலா கட்டாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. எங்கள் திருமணம் விரைவில் நடைபெறும்.  நான் இப்போது ஒரு தெலுங்கு அல்லுடுவாகப் (மருமகன்) போகிறேன். இதனால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full