விஜயை விஜய்னு கூப்பிட்டால் என்ன தவறு? பேட்டியில் விஷ்ணு விஷால் கொடுத்த பதிலடி

ரஜினி-விஜய் சர்ச்சை கருத்துக்கு நடிகர் விஷ்ணு விஷால் கொடுத்த பதிலடி

By subhashini · 29/6/2026

கடந்த சில தினங்களாக விஷ்ணு விஷால் பேசிய கருத்துக்கள் இணையத்தில் சர்ச்சையாகி இருக்கிறது. அதாவது, விஷ்ணு விஷால் பேட்டியில், தலைவரைப் பற்றி சொல்லக்கூடாது. தலைவரையும் மைக் புடிச்சுட்டு நான் விஜய்க்கு எதிரானவன் இல்லை என்று சொல்ற நிலைமைக்கு இன்னைக்கு இருக்கு. அப்படிப்பட்ட சூழலில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தலைவரே நாலு நாள் அமைதியாக இருந்தால் அவரை பற்றி தப்பு தப்பா விஷயத்தை சோசியல் மீடியாவில் பேசுகிறார்கள்.

அவரே வழியில்லாமல் நான் இதெல்லாம் பண்ணவில்லை என்று சொல்ற அளவுக்கு நம்ம நிலைமை ஆகிவிட்டது. ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்று கூறியிருந்தார். இப்படி இவர் பேசியிருந்ததற்கு நெகடிவ் கமெண்ட்கள் வந்திருக்கிறது. விஷ்ணு விஷால், ரஜினியை விமர்சித்து பேசுகிறார் என்று கூறியிருந்தார்கள். தற்போது, எப்படி நீங்கள் ரஜினியை தலைவர் என்று சொல்லிவிட்டு விஜய் மட்டும் பெயர் சொல்லி அழைக்கலாம் என்று விஜய் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக அளித்த பட்டியில் விஷ்ணு விஷால், விஜய் பற்றி ரஜினி என்ன பேசுகிறார் என்பதை தான் நான் சொல்லியிருந்தேன்.

விஷ்ணு விஷால் பேட்டி:

ரஜினி அவர்கள் விஜய் என்று தான் சொல்லியிருக்கிறார். நிறைய பேர் ரஜினியை மட்டும் ஏன் தலைவர் என்று கூப்பிட்டு விஜய்யை பெயர் சொல்லி அழைத்தீர்கள் என்று கேட்கிறார்கள். ரஜினி, விஜய் என்றுதான் சொல்லி இருக்கிறார். அதை தானே நானும் சொன்னேன். அதில் என்ன தவறு இருக்கிறது. இது நடக்கும் தான். எனக்கு இதுதான் முதன்முறை. யாரையும் கஷ்டப்படுத்த நான் அப்படி பேசவில்லை. சோசியல் மீடியாக்களில் வரும் வன்மம் பற்றி தான் பேசினேன். அதிலிருந்து நான் பின்வாங்க போவதில்லை என்று கூறி இருக்கிறார்.

சர்ச்சைக்கு பதிலடி:

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஷ்ணு விஷால். இவர் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். மேலும், சமீப காலமாக விஷ்ணு விஷால் அவர்கள் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

விஷ்ணு விஷால் குறித்த தகவல்:

அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி மற்றும் FIR ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற கட்டா குஸ்தி படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுத்து இருக்கிறார்கள். தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்த படம் ஜூலை 3ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full