நீண்ட நாட்களுக்கு பின் தன் மகனை சந்தித்து தனது பிறந்தநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் (எப்படி வளந்துட்டாரு அவர் பையன்)

By Rajkumar · 17/7/2021

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். சமீப காலமாகவே இவர் வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான “ராட்சசன்” திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விஷ்ணு விஷால் அவர்கள் ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து 2011 ஆம் ஆண்டு ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகனும் உள்ளார்.

சில ஆண்டுகளாகவே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின் இதன் காரணமாக 2017 ஆம் ஆண்டு ஆண்டு இவர்கள் இருவருக்கும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். திருமணம் ஆகிக் கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆன நிலையில் தன் மனைவி ரஜினியிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டார் நடிகர் விஷ்ணு. இது விஷ்ணு விஷால் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தது.

இதையும் பாருங்க : இளசுகளின் லேட்டஸ்ட் கிரஷ்ஷாக மாறி இருக்கும் 'வாழ்' பட நடிகை யார் தெரியுமா ?

கடந்தசில வருடங்களாக பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் காதலில் இருந்து வந்தார். இதனால் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக கூட சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி ஜுவாலாவின் பிறந்தநாளில் விஷ்னு, ஜுவாலாவை திருமணம் செய்து கொள்வதை உறுதி செய்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இவர்கள் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடித்த கையோடு விஷ்ணு விஷால் தனது கையில் AR (ஆர்யன், ரஜினி )என்ற டாட்டூவை குத்தியுள்ளார். முதல் மனைவியை விவாகரத்து செய்யபோவதாக அறிவித்தாலும் தனது மகனை பாசமாக பார்த்துக்கொள்கிறார் விஷ்ணு விஷால். இந்த நிலையில் இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது மகனை 5 மாதங்களுக்கு பின் சந்தித்து இருக்கிறார் விஷ்ணு விஷால்.

behindtalkies AMP · Quick view
View full