கார்த்திக் நடித்த படத்தை கண்டு விஷ்ணு விஷால் ஆதங்கப்பட்டு பதிவிட்ட டீவ்ட் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஷ்ணு விஷால். இவர் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிலா கபடி குழு என்ற படம் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே அவர் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார்.

அதனை தொடர்ந்து இவர் பலேபாண்டியா, குள்ளநரிக்கூட்டம், நீர்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். பின் விஷ்ணு நடித்த ராட்சசன் படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. மேலும், சமீப காலமாக விஷ்ணு விஷால் அவர்கள் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகியிருந்த படம் கட்டாகுஸ்தி.

Advertisement

விஷ்ணு விஷால் திரைப்பயணம்:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது. தற்போது இவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஸ்ரீகாந்த் நடிக்கிறார். அது மட்டுமில்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். இது மட்டுமில்லாமல் இன்னும் சில படங்களில் விஷ்ணு கமிட் ஆகியிருக்கிறார். அதில், தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மோகன்தாஸ்.

விஷ்ணு நடிக்கும் படங்கள்:

இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அது மட்டும் இல்லாமல் தன்னுடைய மகன் ஆரியன் பெயரிலும் ஒரு படத்தில் விஷ்ணு விஷால் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இடம் பொருள் ஏவல் என்ற படத்திலும் விஷ்ணு நடித்திருக்கிறார். இந்த நிலையில் விஷ்ணு விஷால் வருத்தமாக சோசியல் மீடியாவில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், நான் மகான் அல்ல படம் எனக்கு மிகவும் பிடித்த படம். வெண்ணிலா கபடி குழு படத்திற்கு பிறகு இது எனக்கு இரண்டாவது படமாக அமைய வேண்டியது.

Advertisement

விஷ்ணு விஷால் பதிவு:

எல்லாமே முடிவு செய்து விட்டது. ஆனால், விதி வேறு ஒரு திட்டம் போட்டிருந்தது. நான் மகான் அல்ல படம் மட்டும் என்னுடைய இரண்டாவது படமாக அமைந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று சில சமயங்களில் நினைத்து பார்ப்பேன். எல்லாம் விதி என்று வருத்தமாக பதிவிட்டிருந்தார். இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த படம் நான் மகான் அல்ல. இந்த படத்தில் கார்த்திக், காஜல் அகர்வால், ஜெயபிரகாஷ், சூரி, பிரியா அட்லி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

Advertisement

நான் மகான் அல்ல படம்:

இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து இருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அது மட்டும் இல்லாமல் நடிகர் கார்த்தியை கமர்சியல் ஹீரோவாக இந்த படம் தான் கொண்டு சென்றது. மேலும், இந்த படம் வெளியாகி 13 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. சோசியல் மீடியாவில் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இதனால் தான் விஷ்ணு விஷால் அவர்கள் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி இருக்கிறார்.

Advertisement