பட பிடிப்பில் விபத்து.! மீண்டும் மீண்டும் காயமடைந்து வரும் விஷ்ணு விஷால்.!
ராட்சசன் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர்விஷ்ணு விஷால் தற்போது 'இடம் பொருள் ஏவல்' மற்றும் 'ஜகஜல கில்லாடி' என்ற இரண்டு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பட பிடிப்பில் நடத்த விபத்தில் படு காயம் அடைந்தார் விஷ்ணு விஷால்.
https://twitter.com/vishnuuvishal/status/1089887850332545024
வெண்ணிலா கபடி குழு மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். அதன் பின்னர் பல்வேறு தரமான படங்களை கொடுத்துள்ளார். தற்போது இவர் நடித்து வரும் படத்தில் சண்டை காட்சியின் போது சிறு விபத்தில் சிக்கியுள்ளார்.
கடந்த நான்கு நாட்களுக்கு முன், இதன் ஷூட்டிங்கில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்தபோது, காயம் அடைந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர், இன்னும் 4 வாரங்கள் ஓய்வில் இருக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். இத விபத்தால் கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
வலி பயங்கரமாக இருக்கிறது. கைகளிலும் வலி. சிகிச்சைக்குப் பின் நான்கு வாரம் ஓய்வெடுக்க மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விரைவில் குணமாகி படப்பிடிப்பில் பங்கேற்பேன் என்று நம்புகிறேன். உங்கள் ஆதரவும் ஆசிர்வாதமும் தேவை’’ என்று தெரிவித்துள்ளார்.