விஷ்ணு விஷாலை அரை நிர்வாணமாக போட்டோ எடுத்த அவரின் இரண்டாம் மனைவி - பெருமையாக பகிர்ந்த விஷ்ணு விஷால்.

By Ajju · 23/7/2022

சமீபத்தில் ரன்வீர் சிங் அரை நிர்வாண போட்டோ ஷூட் நடத்தி இருந்தது பெரும் விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில் தற்போது அதே பாணியில் நடிகர் விஷ்ணு விஷால் போட்டோ ஷூட் நடித்த இருப்பது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. ரன்வீர் சிங் கடந்த 2013 முதல் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனை காதலித்து வந்தார். நீண்ட நாட்களாக காதலில் இருந்த ஜோடிகள் கடந்த 2018 ஆம் ஆண்டு பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்துக்கொண்டனர். ரன்வீர் சிங் எப்போதுமே வித்தியாசமாக உடை அணியக்கூடியவர். பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் கூட அவர் அதனை அத்தனை நம்பிக்கையுடன் அணிந்து வருவதை பார்த்தால் ஃபேஷன் மீது ரன்வீருக்கு இருக்கும் ஈடுபாடு வெளிப்படையாகவே தெரியும். உடைக்கு ஏற்ற மாதிரி சிகை அலங்காரத்தை மாற்றுவதுதான் ரன்வீரின் ஸ்டைல் . பாலிவுட்டின் ஸ்டைல் ஐகானாக ரன்வீர் கொண்டாடப்படுகிறார்.

ஹாலிவுட் நடிகர் ஹங்க் பர்ட் ரெனால்ட்ஸுக்கு சமர்பணம் செய்யும் விதமாக ரன்வீர் சிங் தனியார் பத்திரிக்கை ஒன்றுக்கு தனது நிர்வாண போஸை கொடுத்துள்ளார். ஹாலிவுட் நடிகர் ஹங்க் பர்ட் ரெனால்ட்ஸ் ஏற்கனவே கொடுத்திருந்த புகைப்படத்தை மாடலாக கொண்டு அதே போன்ற புகைப்படத்தை வெளியிட்டார். ஒரு சிலர் ரன்வீர் சிங் எடுத்த முயற்சியை பாராட்டினாலும், மற்றொரு புறம் இவரின் இந்த செயலுக்கு எதிர்ப்பு வந்தவண்ணமே உள்ளது.

இதையும் பாருங்க : யோகி பாபு வீட்டிற்கே சென்று அவரின் மகனுடன் வீடியோ வெளியிட்ட ரேணிகுண்டா பட நடிகை - யோகி பாபு கூட இதுவரை வீடியோ போடலையே

நிர்வாண இருப்பது அவர் இல்லையாம் அவர் ஆன்மாவாம் :-

நடிகர் ரன்வீர் சிங் நான் உடல்ரீதியாக நிர்வாணமாக இருப்பது மிகவும் எளிதானது. ஆனால் இந்த நிகழ்ச்சிக்காக நான் நிர்வாணமாக இருந்துள்ளேன். முதலில் என் ஆன்மாவை நீங்கள் பார்க்க வேண்டும். அது எவ்வளவு நிர்வாணமாக இருக்கிறது என்று. நிச்சயமாக என் உடலோடு என் ஆன்மாவும் நிர்வாணமாகதான் இருக்கிறது. என்னால் ஆயிரம் பேருக்கு முன்னாள் நிர்வாணமாக இருக்க முடிகிறது. ஆனால், அந்த ஆயிரம் பேரும் என் முன்னால் அசௌகரியமாக இருப்பதாக தெரிவித்தார்.

https://twitter.com/GokulSaravanak3/status/1550810187690258433

மீம்ஸ்க்கு உள்ளான ரன்வீர் சிங் :-

போட்டோஷூட் பண்ண மனைவி தீபிகா படுகோன் ஆடை அளிக்காததால் ரன்வீர் சிங் இப்படி நிர்வாணமாக போஸ் கொடுத்திருக்கிறார் என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள். ரன்வீர் அணியும் உடைகள் அவரின் மனைவியின் உடை போன்று இருப்பதாக பல காலமாக கலாய்க்கிறார்கள். இந்நிலையில் அவரின் உடையை பார்த்து கிண்டல் செய்தீர்கள் இப்பொழுது என்ன செய்வீர்கள் என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

https://twitter.com/Vijaymafia001/status/1550810707515637760

ரன்வீர் சிங் பாணியில் விஷ்ணு விஷால் :

ரன்வீர் சிங்கின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்க்கும்போது கலாய்க்காமல் இருக்க முடியவில்லை என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள். மேலும் அவரவர் விருப்பப்படி மீம்ஸ் போட்டு பங்கம் செய்து கொண்டிருக்கிறார்கள். போட்டோஷூட் முடிந்து வீட்டிற்கு சென்ற ரன்வீரை தீபிகா அடித்ததாகவும் மீம்ஸ் போட்டிருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் ரன்வீர் சிங் பாணியில் அரை நிர்வாணா போட்டோ ஷூட்டை நடத்தி இருக்கிறார் விஷ்ணு விஷால்.

https://twitter.com/gopin1707/status/1550831392950390785

மனைவியை வைத்து எடுத்த போட்டோ ஷூட் :

தமிழில் பிரபல நடிகராக திகழ்ந்து வரும் விஷணு விஷால் வெண்ணிலா கபடி குழு, ராட்சசன் போன்ற பல தரமான படங்களை கொடுத்து இருக்கிறார். மேலும், இவர் ரஜினி என்ற பெண்ணை திருமணம் செய்து ஒரு மகனை பெற்ற நிலையில் அவரை விவாகரத்து செய்து பின்ன ஜுவாலா என்பவரை இரண்டாம் திருமணம் செய்தார். இப்படி ஒரு நிலையில் இவரின் இந்த போட்டோ ஷூட் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இந்த புகைப்படங்களை தன் இரண்டாம் மனைவியை வைத்து தான் எடுத்து இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full