தமிழ் திரையுலகில் 2009-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘வெண்ணிலா கபடி குழு’. இந்த படத்தை இயக்குநர் சுசீந்திரன் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடித்திருந்தார். இது தான் விஷ்ணு விஷால் கதாநாயகனாக அறிமுகமான முதல் படமாம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.

இதனைத் தொடர்ந்து சித்தார்த் சந்திரசேகரின் ‘பலே பாண்டியா’, சுதா கொங்கராவின் ‘துரோகி’, ஸ்ரீ பாலாஜியின் ‘குள்ளநரி கூட்டம்’, சீனு ராமசாமியின் ‘நீர்ப் பறவை’, ராம் குமாரின் ‘முண்டாசுப்பட்டி, ராட்சசன்’, சுசீந்திரனின் ‘ஜீவா, மாவீரன் கிட்டு’, ரவிக்குமாரின் ‘இன்று நேற்று நாளை’, முருகானந்தமின் ‘கதாநாயகன்’, செல்லா அய்யாவுவின் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ என அடுத்தடுத்து பல படங்களில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்தார்.

Advertisement

தற்போது, பிரபு சாலமனின் ‘காடன்’, எழிலின் ‘ஜகஜால கில்லாடி’, மனு ஆனந்தின் ‘FIR’ மற்றும் முரளி கார்த்திக்கின் ‘மோகன் தாஸ்’ என பல படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் விஷ்ணு விஷால். திரை உலகில் என்ட்ரியாவதற்கு முன்பு விஷ்ணுவின் கனவாக இருந்தது கிரிக்கெட் மட்டும் தான்.

டி.என்.சி.ஏ லீக் போட்டிகளில் விளையாடிய விஷ்ணு விஷால், தனது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கிரிக்கெட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த நிலையில் தனது இளம் பருவத்தில் அண்டர் 19 கிரிக்கெட் போட்டியில் பரிசு வென்ற புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Advertisement
Advertisement