ஏன் சார் இத்தனை வருஷமா இந்தியா என்ற பெயர், சேவாக்கின் பாரத் பதிவிற்கு விஷ்ணு விஷால் கேள்வி.

By Arun · 5/9/2023

பாரத் என்ற பெயர் சர்ச்சைக்கு கிரிக்கெட் வீரர் சேவாக்கிற்கு நடிகர் விஷ்ணு கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மத்திய அரசு இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்ற வேண்டும் என்று திட்டம் இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அந்த வகையில் இந்தியாவில் நடக்க இருக்கும் ஜி 20 மாநாடு மாலை விருந்து அழைப்பிதழில் President of ‘Bharat’ என்று குறிப்பிட்டு இருந்தார்கள். தற்போது இது தான் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.

இதற்கு பலரும் ஆதரவாகவும், எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நெட்டிசன் ஒருவர் கிரிக்கெட் வீரர் சேவாக் ஏற்கனவே வெளியிட்ட பதிவில் பாரத் வெஸ் பாக் என்று குறிப்பிட்டிருந்தார். அதை தற்போது சோசியல் மீடியாவில் பதிவிட்டு, அனைவருக்கும் முன்னதாக இந்த பாரதத்தை சுட்டிக்காட்டியவர் சேவாக் தான் என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த பதிவை டீவ்ட்வ்ர் பக்கத்தில் ஷேவாக் ஷேர் செய்து, ஒரு பெயர் நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் நம்புகிறேன்.

சேவாக் டீவ்ட்:

நாம் பாரதியர்கள். இந்தியா என்பது ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட பெயர். எங்கள் அசல் பெயரான 'பாரத்' - யை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறுவதற்கு நீண்ட கால தாமதமாகிவிட்டது. பிசிசிஐ இதை கவனத்தில் எடுக்க வலியுறுத்துகிறேன். மேலும் பிசிசிஐ தலைவர் ஜெய்ஷாவை டேக் செய்து வருகிற உலககோப்பை போட்டியில் நமது இந்திய அணி வீரர்கள் பாரத்தை தங்களது நெஞ்சில் வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

விஷ்ணு விஷால் பதிலடி:

இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரபல நடிகரான விஷ்ணு விஷால் இந்தப்பதிவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து, அய்யா, உரிய மரியாதையுடன் கேட்கிறேன். இத்தனை வருடங்களில் இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை சேர்க்கவில்லையா??” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். தற்போது இது தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஷ்ணு விஷால்.

விஷ்ணு விஷால் திரைப்பயணம்:

இவர் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிலா கபடி குழு என்ற படம் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே அவர் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதிலும், விஷ்ணு நடித்த ராட்சசன் படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. மேலும், சமீப காலமாக விஷ்ணு விஷால் அவர்கள் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

விஷ்ணு விஷால் நடிக்கும் படம்:

அந்த வகையில் கடந்த ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகியிருந்த படம் கட்டாகுஸ்தி. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது. தற்போது இவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் ஸ்ரீகாந்த் நடிக்கிறார். அது மட்டுமில்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full