சைனாவில் கொரோனாவால் இறந்த பாட்டி குறித்து இரங்கல் தெரிவித்த விஷ்ணு விஷால் காதலி - கேலி செய்த நெட்டிசன்கள். விஷ்ணு விஷால் கோபம்.

By Rajkumar · 13/2/2021

தனது காதலியின் பாட்டி இறந்ததை கேலி செய்த நபர்களுக்கு விஷ்ணு விஷால் பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். சமீப காலமாகவே இவர் வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான “ராட்சசன்” திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விஷ்ணு விஷால் அவர்கள் ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து 2011 ஆம் ஆண்டு ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகனும் உள்ளார். சில ஆண்டுகளாகவே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

https://twitter.com/Guttajwala/status/1360118579568406530

பின் இதன் காரணமாக 2017 ஆம் ஆண்டு ஆண்டு இவர்கள் இருவருக்கும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். திருமணம் ஆகிக் கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆன நிலையில் முதல் மனைவியை விவாகரத்து செய்தார் விஷ்ணு விஷால். இதைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் நடிகை அமாலபாலை திருமணம் செய்ய இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் வெளியாகின. ஆனால், அது எல்லாம் உண்மை இல்லை, வதந்தி என்று மறுத்தார் நடிகர் விஷ்ணு விஷால். இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் கடந்த சில மாதங்களாக பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் காதலில் இருந்து வந்தார். இதனால் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக கூட கூறப்பட்டது.

இதையும் பாருங்க : என் மூஞ்சிய பாக்கவே புடிக்கல, தற்கொலை பண்ணிக்க போறேன் - நீண்ட நாட்களுக்கு பின் கதறி அழுது மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ.

விஷ்ணு விஷால் காதலியான ஜுவாலா, விஷ்ணு விஷால் மற்றும் தனுக்கு இருக்கும் உறவு குறித்து பிரபல பத்திரிகைக்கு பேட்டிகொடுத்து இருந்தார் . அதில், ஆம் நாங்கள் இருவரும் டேட்டிங் செய்து வருகிறோம் முன்பே சொன்னது போல இதில் மறைக்க எதுவுமே கிடையாது விரைவில் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போகிறோம் திருமண தேதி முடிவு அல்லது இதுகுறித்து ஏற்பாடுகள் நடந்தாலும் நாங்கள் விரைவில் அறிவிப்போம் என்று கூறி இருந்தார்.

https://twitter.com/Guttajwala/status/1360120474198450180

இப்படி ஒரு நிலையில் ஜுவாலாவின் பாட்டி சீனாவில் கொரோனா தொற்று ஏற்பட்டு காலமாகி இருக்கிறார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் சோகத்துடன் பதிவிட்டு இருந்தார் ஜுவாலாவை பலரும் கேலி செய்து இருக்கின்றனர். இதுகுறித்து பதிவிட்டு இருந்த அவர், சீனாவில் இருந்த என்னுடைய பாட்டி குறித்து நான் வருந்திக் கொண்டு இருக்கும்போது எனக்கு இனவெறியோடு சில பதில்கள் வருவதை கண்டு ஆச்சரியமாக இருக்கிறது. ஏன் நான் அதை சைனீஸ் வைரஸ் என்று சொல்லாமல் கோவிட் என்று சொல்கிறேன் என்று. இந்த சமூகத்திற்கு என்ன ஆச்சு ? நாம் எதை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம். அசிங்கமாக இருக்கிறது என்று வருத்தத்துடன் பதிவுசெய்துள்ளார்.

https://twitter.com/TheVishnuVishal/status/1360133596774690817

தனது காதலியின் இந்த பதிவை பார்த்த விஷ்ணு விஷால்,நாம் மிகவும் கொடுமையான சமூகத்தில் வாழ்ந்து வருகிறோம். அவர்களாக மாறும் வரை எதையும் மாற்ற முடியாது என்று பதிவிட்டுள்ளார். இது ஒரு புறம் இருக்க, கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி தந்து பிறந்தநாளில் விஷ்னு ஜுவாலாவை திருமணம் செய்து கொள்வதை உறுதி செய்து இருந்தார் விஷ்ணு விஷால் . ஜுவாலாவின் பிறந்த நாளன்று இருவரும் மோதிரத்தை மாற்றி தங்களது காதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்று இருந்தனர் . விரைவில் இவர்கள் திருமண தேதியை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full