முடிந்த 4 ஆண்டு பிரச்சனை - சூரியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து விஷ்ணு விஷால் போட்ட பதிவு.

By Rajkumar · 9/4/2024

தமிழ் சினிமா உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூரி. இவர் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். சூரி அவர்கள் தற்போது விவேக், சந்தானம் அளவிற்கு காமெடியில் சிறந்து விளங்கி வருகிறார். வடிவேலுக்கு பாடி லங்குவெஜ், சந்தானம் என்றால் கலாய்ப்பது என்று நாம் அனைவரும் அறிவோம். அது போல சூரி ஆங்கிலத்தில் அடிக்கடி பிழையாக பேசும் ஒரு புது யுத்தியை பயன்படுத்தி காமெடியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

மேலும், தொடர்ந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் சூரி அவர்கள் விஷ்ணு விஷாலின் தந்தை மீது பண மோசடி வழக்கு பதிவு செய்துள்ள தகவல் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கடந்த 2015 ஆம் தெரிந்த அன்புவேல்ராஜன் தயாரிப்பில் ‘வீர தீர சூரன்’ என்ற படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடிக்க அந்த படத்தில் காமெடி நடிகராக சூரி ஒப்பந்தமாகி இருக்கிறார்.

விஷ்ணு விஷால் தந்தை மீது சூரி அளித்த புகார்:

அப்போது நடிகர் சூரிக்கு 40 லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது.ஆனால், பேசப்பட்ட சம்பளம் பணத்திற்கு பதிலாக இன்னும் சில கோடிகள் கொடுத்தால் அந்த பணத்தில் நிலம் வாங்கித் தருவதாக படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனும், விஷ்ணு விஷாலின் தந்தையான ஓய்வுபெற்ற டிஜிபி ரமேஷ் கூறி இருக்கிறார்கள். இதனால் நடிகர் சூரியும் நம்பி பணத்தை கொடுத்து இருக்கிறார்.

https://www.youtube.com/shorts/s0HtkQTxaJc

பின் சென்னையை அடுத்த சிறுசேரியில் நிலம் வாங்கி தருவதாக சொல்லி அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் இருவரும் சேர்ந்து சூரியை ஏமாற்றி இருக்கிறார்கள். பிறகு 2020 ஆம் சூரி அளித்த புகாரின் அடிப்படையில் அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் ஆகியோர் மீது போலீஸார் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.மேலும், இந்த வழக்கு முன்னாள் டிஜிபி ரமேஷுக்கு ஆதரவாக நகர்கிறது என்று சூரி கோர்ட்டில் முறையிட்டு இருக்கிறார்.

துரோகத்தை மறக்காத சூரி :

அதோடு இந்த வழக்கு சில காலமாக நடந்து வருவதால் விசாரணையை மத்திய குற்றப்பிரிவில் இருந்து சிபிஐக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சூரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்னும் சென்று கொண்டு இருக்கும் நிலையில் சமீபத்தில் பேசிய சூரி ' நம்பிக்கை துரோகம் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியல. கடவுள் நிச்சயம் கொடுப்பான். இதுவே எனக்கு கடவுள் தான் கொடுத்தான் என்று கூறி இருந்தார்.

View this post on Instagram

A post shared by Vishnu Vishal (@thevishnuvishal)

விஷ்ணு விஷால் பதிவு :

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் லால் சலாம் படத்திற்கான நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஷ்ணு விஷால் ' கூடிய விரைவில் உங்களுக்கு எல்லா உண்மையும் தெரியவரும். நாங்கள் இருவரும் ஒன்றாக நடிப்போம். தற்போது நாங்கள் பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். விரைவில் ஒரு நல்ல செய்தி வரும் என்று கூறி இருந்தார். இந்த நிலையில் சூரியுடன் தானும் தனது தந்தையும் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள விஷ்ணு விஷால் 'காலம் தான் அனைத்திற்கும் அனைவருக்குமான பதில். இதே நேர்மறையாக விஷயம் பாயட்டும் சூரி அண்ணே. லவ் யூ அப்பா' என்று பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full