அமலா பாலுடன் இரண்டாவது திருமணம்..!அதிகாரபூர்வ தகவலை வெளியிட்ட விஷ்ணு விஷால்..!
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ஜீவா, வெண்ணிலா கபடிக் குழு, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை எனப் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ராட்சசன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பேசப்பட்டது.
சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷால் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டார் என்ற செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கிடையே விஷ்ணு விஷால் – அமலாபால் இருவரும் முதல் திருமண விவாகரத்து பெற்றுள்ள நிலையில், இவர்கள் மறுமணம் செய்ய உள்ளதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
விஷ்ணுவுடன் ராட்சசன் படத்தில் நடித்தப்போது இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாகவும் தற்போது அந்த நெருக்கம் திருமணம் வரை சென்றுள்ளதாக ஒரு செய்தி வைரலாக பரவியது. ஆனால், இந்த செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியும் கோபமும் அடைந்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ள நடிகர் விஷ்ணு விஷால்,என்ன ஒரு முட்டாள் தனமான செய்தி, தயவு செய்து கொஞ்சம் பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள். நாங்களும் மனிதர்கள் தான்,எங்களுக்கும் குடுமபம் எல்லாம் உள்ளது. உங்களின் இஷ்டத்திற்கு எதையும் பரப்பாதீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.Wat a stupid news..plz b responsible ..we r humans too n v hav lives n family..just dnt write anything for d sake of it..? https://t.co/DL88C1goVn
— VISHNUU VISHAL - VV (@vishnuuvishal) November 27, 2018