அந்த ஒரு படத்தில் நடித்ததற்கு இது தான் காரணம் - விஷ்ணு விஷாலின் மனைவி ஜுவாலா கட்டா சொன்ன தகவல்

By subhashini · 24/3/2025

விஷ்ணு விஷாலின் மனைவி ஜு வாலா கட்டா படத்தில் நடித்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஷ்ணு விஷால். இவர் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிலா கபடி குழு என்ற படம் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே அவர் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

அதிலும், விஷ்ணு நடித்த ராட்சசன் படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. மேலும், சமீப காலமாக விஷ்ணு விஷால் அவர்கள் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதிலும் இவரது நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி மற்றும் FIR ஆகிய கட்டா படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. கடைசியாக இவர் ‘லால் சலாம்’ படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் இயக்கியிருந்தார்.

விஷ்ணு விஷால் குறித்த தகவல் :

கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திய இந்தப் படத்தில் விக்ராந்த் பிரதான வேடங்களில் நடிக்க, ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கௌரவ வேடத்தில் நடித்து இருந்தார்கள். இருந்தாலும் இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இது மட்டுமில்லாமல் இன்னும் சில படங்களிலும் விஷ்ணு கமிட் ஆகியிருக்கிறார். அதில் தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மோகன்தாஸ். அது மட்டும் இல்லாமல் தன்னுடைய மகன் ஆரியன் பெயரிலும் ஒரு படத்தில் விஷ்ணு விஷால் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இடம் பொருள் ஏவல் என்ற படத்திலும் விஷ்ணு நடித்திருக்கிறார்.

விஷ்ணு விஷால் குடும்பம்:

இதனிடையே விஷ்ணு விஷால் – ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகனும் உள்ளார். சில ஆண்டுகளாகவே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின் இதன் காரணமாக 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். பின் விஷ்ணு அவர்கள் பேட்மிண்டன் வீராங்கனை ஜு வாலா கட்டாவை திருமணம் செய்து கொண்டார். இருந்தாலும், விஷ்ணு விஷால் தன்னுடைய மகன் ஆரியனை கவனித்து கொள்கிறார். தற்போது விஷ்ணு விஷால்- ஜுவாலா கட்டா இருவரும் இணைந்து சில பிசினஸ்கள் நடத்தி வருகிறார்கள்

ஜு வாலா கட்டா நடித்த படம்:

இந்த நிலையில் ஜு வாலா கட்டா படத்தில் நடித்திருக்கும் தகவல் தான் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, ஸ்வாலா கட்டா பேட்மிட்டன் வீராங்கனையாக இருக்கும்போதே 2011-13-ஆம் ஆண்டு "கண்டே ஜாரி கலந்தயின்டே" என்ற தெலுங்கு படத்தில் தான் இவர் நடித்திருந்தார். இந்த படத்தில் நிதின் ஹீரோவாகவும், நித்தியா மேனன் ஹீரோயினியாகவும் நடித்திருந்தார். இந்த படத்தில் ஒரு கேமியா ரோலில் அதுவும் ஒரு ஜுவாலா கட்டா பாடலுக்கு தான் நடனம் ஆகி இருந்தார். அந்தப் பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. அதற்கு பின் இவர் எந்த படத்திலும் கமிட்டாகவில்லை.

ஜு வாலா கட்டா பேட்டி:

இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜு வாலா கட்டா, நிதின் என்னுடைய நண்பர். அவர் என்னிடம், என்னுடைய படத்தில் ஒரு பாடல் உள்ளது. நடிக்கிறீர்களா? என்று கேட்டார். நான் ஜாலியாக ஓகே என்று சொல்லிவிட்டேன். ஆனால் அவர் சீரியஸாக கேட்டிருக்கிறார். மூன்று மாதத்திற்கு பின்னர் எல்லாம் தயாராகிவிட்டது. ஷூட்டிங் இருக்கு, வருவீர்களா? என்று கேட்டார். அப்போது எனக்கு ஒரே ஷாக். நான் மறுத்தாலுமே தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்று நினைத்து தான் அதில் நடிப்பதற்கு ஒத்துக்கொண்டேன். அந்த பாடலிலும் நடனமாடினேன். அதற்குப் பிறகு நான் எந்த ஒரு படத்திலும் நடிக்க ஒத்துக் கொள்ளவில்லை என்று கூறியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full