24 மணி நேரத்திற்குள்ளாக பேட்டயை பின்னுக்கு தள்ளிய விஸ்வாசம்..!

By Rajkumar · 30/12/2018

இயக்குனர் சிவா இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் பொங்கல் ஸ்பெஷல் ரிலீஸாக விஸ்வாசம் படம் வெளியாகிறது. அஜித் ரசிகரகளும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் ஒரு பெரும் விசயம் என்றால் அது ஒரு படத்தின் டிரைலரை தான். 

இயக்குனர் சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக இணைந்துள்ள இந்த படத்தில் நயன்தாரா நடிக்கிறார். மேலும், தம்பி ராமைய்யா, யோகிபாபுவும் நடித்துள்ளனர். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள நடித்துள்ளனர். படத்திற்குஇமான் இசையமைத்துள்ளார். 

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ‘பேட்ட’ படத்திற்கு போட்டியாக இந்த படம் வெளியாக இருக்கிறது.ரஜினியின் பேட்ட படத்தின் ட்ரைலர் வெளியான இரண்டு நாளில் விஸ்வாசம் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு தேதியை வெளியிட்டது சத்ய ஜோதி நிறுவனம்.

நேற்று இரவு வெளியான விஸ்வாசம் ட்ரைலர் அறிவிற்ப்பிக்கு பின்னர் இந்திய அளவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ட்ரெண்டிங் படங்களின் வரிசையில் நேற்று முதலிடத்தில் இருந்த ‘பேட்ட’ மற்றும் சில இந்திப்படங்களை அடித்து நொறுக்கி முதலிடத்தை அடைந்திருக்கிறது அஜீத்தின் ‘விஸ்வாசம்’.

Tamil Behind Talkies AMP · Quick view
View full