சொன்னதை செய்த அஜித் ரசிகர்கள்..!சர்கார் சாதனையை முறியடித்த விஸ்வாசம்..!

By Rajkumar · 30/12/2018

அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள விஸ்வாசம் படத்தின் ட்ரைலர் தான் இன்று அஜித் ரசிகர்களுக்கு ஒரு மாபெரும் கொண்டாட்டமாக அமைந்துள்ளது. இன்று மதியம் 1.30 மணிக்கு வெளியான ட்ரைலர் சர்கார் சாதனையை முறியடித்துள்ளது.

இயக்குனர் சிவா இயக்கியத்தில் நான்காவது முறையாக காய் கோர்த்துள்ளார் அஜித். சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், தம்பி ராமைய்யா, யோகி பாபு, ரோபோ ஷங்கர், கோவை சரளா என்று பலர் நடித்துள்ளனர்.

வரும் ஜனவரி மாதம் 10 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தின் ட்ரைலருக்காக அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர்.மேலும், ட்ரைலர் வெளியான நேரம் முதல் பல்வேறு சாதனைகளை புரிய வேண்டும் என்று டார்கெட் கூட வைத்தனர்.

https://twitter.com/SathyaJyothi_/status/1079287143594225665

தற்போது இந்த ட்ரைலருக்காக வைத்த டார்கெட்டை அடைந்துள்ளனர் அஜித் ரசிகர்கள். இந்த ட்ரைலர் வெளியான 4 நிமிடங்களிலேயே 100K லைக்ஸ் பெற்றுள்ளது. இதனை படத்தயாரிப்பு நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் விஜய்யின் சர்கார் டீஸர் செய்த சாதனையை முறியடித்துள்ளது. சர்கார் டீஸர் வெளியான
5 நிமிடத்தில் 100K லைக்ஸ்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

behindtalkies AMP · Quick view
View full