விஸ்வாசம் படத்துல நல்லா நடிச்சீங்கனு சொல்லிட்டு, இதையும் சொன்னார் - இதனால் தான் நான் வெளியில போறதே இல்ல - விஸ்வாசம் அனிகா வேதனை.

By Rajkumar · 10/3/2021

தமிழ் சினிமாவில் எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கதா இடத்தை பிடித்து விடுகிறார்கள். பேபி ஷாலினி துவங்கி மீனாவின் மகள் பேபி நைனிகா வரை பல குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் பிரபலம் தான். அந்த வகையில் தமிழ் திரைப்படங்களில் மகத்தான வெற்றி கொடுத்த என்னைஅறிந்தால், விசுவாசம் ஆகிய படங்களில் தல அஜித்குமாருக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்தர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

நடிகை அனிகா அவர்கள் 2010 ஆம் ஆண்டு வெளி வந்த கத திருடனும் என மலையாள மொழி திரைப் படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமானர். தல அஜித் நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளி வந்த "என்னை அறிந்தால்" படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா சுரேந்தர். இவர் மலையாள மொழியில் பத்துக்கும் மேற்பட்ட படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார். அதுவும் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார்.

இதையும் பாருங்க : கேச வாபஸ் வாங்கு, இல்லனா - பண மோசடி புகார் அளித்த ஈழப் பெண்ணை மிரட்டியுள்ள ஆர்யா - திருமண நாளில் வெளியான ஆடியோ.

என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து அனிகா விஸ்வாசம் படத்தில் அஜித் மகளாக நடித்திருந்தார். பொங்கல் பாடாண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு வெளியான விஸ்வாசம் படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்திருந்தது. மேலும், வசூல் ரீதியாகவும் இந்த படம் பல்வேறு சாதனைகளை செய்திருந்தது. இந்த படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்த அனிகா தற்போது நயன் போலவே மாறி வருகிறார்.

சமீபத்தில் இவர் நடத்திய போட்டோ ஷூட்டை பார்த்து பலரும் இவரை குட்டி நயன்தாரா என்று புகழ்ந்து தள்ளி வந்தனர். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் வெளியில் சென்று போது ஒருவர், நீங்கள் விஸ்வாசம் படத்தில் நன்றாக நடித்தீர்கள் என்று சொன்னார் பின்னர் நீங்க ரொம்ப குள்ளமா இருக்கீங்க, நீங்க உயரமா ஆக வேண்டும் என்று சொன்னார். இதனால் தான் நான் பொது இடங்களுக்கு செல்ல விரும்புவது இல்லை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full