அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த மாதம் 10 ஆம் தேதி வெளியான விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது அத்தோடு வசூல் ரீதியாகவும் பல சாதனைகளை புரிந்து வருகிறது. இதுவரை வந்த அஜித் படத்திலேயே இந்த படம் தான் மிகப்பெரிய வெற்றி என்று கூறப்படுகிறது.

விஸ்வாசம் படம் 5 வது வாரம் நெருங்கிய போதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், தற்போது வரை தமிழகத்தில் மட்டும் இந்த படம் 208 திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் வெற்றி குறித்து படத்தின் விநியோகிஸ்தர் பேட்டி அளித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து பேசிய அவர், விஸ்வாசம் படத்தின் வசூல் குறித்தும் , ஹிட் குறித்தும் எங்களிடம் ஒரு மில்லியன் கேள்விகள் கேட்டாலும் நாங்கள் சொல்வது ஒரே பதில்தான். தமிழ்சினிமாவின் ஒரே மாபெரும் வெற்றிப்படம் என்றால் அது விஸ்வாசம்தான் என்று ஆணித்தனமாக சொல்கிறார்.

மேலும், தயாரிப்பாளர், வினியோகஸ்தர், தியேட்டர் அதிபர்கள் என அனைவருக்கும் லாபம் ஈட்டிக் கொடுத்த படம் இது தான் இது எங்கள் வெற்றி அல்ல, உங்கள் வெற்றி. இந்தப் படத்தின் வினியோகஸ்தர் என்ற முறையில் நம்பிக்கையுடனும் பெருமையுடனும் சொல்கிறேன், ‘விஸ்வாசம்’ தமிழ் சினிமாவில் நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய வெற்றி’ என்றும் கூறியுள்ளார்.

Advertisement
Advertisement