இயக்குனர் சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் இந்த பொங்கலுக்கு விஸ்வாசம் படம் திரைக்கு வரவுள்ளது.இந்த நிலையில் சூப்பர் ஸ்டாரின் பேட்ட படமும் இதே நாளில் வருவது, விஸ்வாசம் படத்திற்கு பின்னடைவு என்று கருதினார்கள்.

ஆனால், விஸ்வாசம் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியான நாளில் இருந்தே இந்த படத்திற்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புள்ளது என்று அனைவரும் தெரிந்து கொண்டனர். பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களுகும் இடையே திரையரங்குகளை பிடிக்க கடும் போட்டி நிலவியது.

Advertisement

அதே போல கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் பேட்ட படம் தான் அதிக திரையரங்கை கைபற்றியது என்ற சில தகவலும் வெளியாகி இருந்தது. ஆனால், தமிழகம் முழுவதும் பேட்டயை விட விஸ்வாசத்திற்கே அதிக திரையரங்குகள் கிடைத்துள்ளது.

அதிலும் சேலம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், வேலூர், திருவண்ணாமலை என பல பகுதிகளில் விஸ்வாசம் படத்திற்கு தான் அதிக தியேட்டர்கள் கிடைத்துள்ளது. இதன் மூலம் ஜனவரி 10 ஆம் தேதி இந்த இரண்டு படங்களின் ரிசல்ட் எப்படி வந்தாலும், முதல் நாள் பேட்டயை விட விஸ்வாசம் கையே ஓங்கியிருக்கும்.

Advertisement
Advertisement