இணையத்தில் வெளியாக போகும் விஸ்வாசம்.! ஆம், உண்மை தான்.!

By Rajkumar · 5/1/2019

அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்தை அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். படத்தின் புக்கிங் துவங்கபட்ட நிலையில் இப்போதே அஜித் ரசிகர்கள் பேனர், போஸ்டர் என கொண்டாட்டங்களை துவங்கி விட்டனர்.

மேலும்,பொங்கலை முன்னிட்டு ரஜினியின் ‘பேட்ட’ படத்துடன் 10ம் தேதியே ரிலீஸாகவிருக்கும் அஜீத்தின் ‘விஸ்வாசம்’ படத்துக்கு முதல் நாளன்று நள்ளிரவு ஒரு மணிக்கு காட்சிக்கே அனுமதி பெற்றிருப்பதாக ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி செய்திகள் உலா வருகின்றன.

இதையும் படியுங்க : சென்னையில் எத்தனை திரையரங்குகளில் விஸ்வாசம் படம் வெளியாக இருக்கிறது.! லிஸ்ட் இதோ.! 

ஆனால், தற்போது அஜித் ரசிகர்களுக்கு ஒரு வருத்தமான செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. அது என்னவெனில் விஸ்வாசம் திரைப்படம் வெளியான சில வாரங்களிலேயே பிரபல ஷாப்பிங் நிறுவனமான அமேசான் ப்ரைம் வீடியோவில் விஸ்வாசம் திரைப்படத்தை வெளியிட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொதுவாக அமேசான் பிரைம் ஆப்-பில் திரைப்படங்கள் வெளியாகி சில காலங்கள் கழித்து தான் அமேசானில் வெளியிடுவார்கள் ஆனால், விஸ்வாசம் வெளியான சில வாரங்களிலேயே அமேசானில் வெளியாக இருப்பது ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றாலும் ஒரு பக்கம் இது படத்தின் வசூலை பாதிக்ககூடிய வாய்ப்பும் இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full