யூடுயுபில் இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் செய்யாத சாதனை..!அடிச்சி தூக்கும் அஜித்..!

By Rajkumar · 31/12/2018

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘விஸ்வாசம்’. பொங்கல் ரிலீசுக்குத் தயாராகி இருக்கும் விஸ்வாசம் திரைப்படத்தின் டிரைலர் நேற்று மதியம் 1.30 மணிக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டத்தை ஏற்படுத்தியது.

இந்த டிரைலரில் அஜித் பேசும் வசனங்களான, பங்காளிகளா அடிச்சி தூக்கலாமா, என் கதையில நான் வில்லன்டா, உள்ளிட்ட பல வசனங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், பல்வேறு படத்தின் ட்ரைலர் சாதனைகளையும் அடித்து தூக்கி வருகிறது.

இதையும் படியுங்க : விஸ்வாசம் ட்ரைலரை பார்த்து மிரண்ட விஜய் 63 குழுவின் முக்கிய நபர்..!

ட்ரெய்லர் வெளியான 12 நிமிடங்களில் 1 மில்லியன் பார்வைகளையும், 44 நிமிடங்களில் 3 மில்லியன் பார்வைகளையும் கடந்து சாதனை படைத்துள்ளது. இதை தங்களுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது சத்யஜோதி நிறுவனம்.

மேலும், விஸ்வாசம் படம் 1 மில்லியன் லைக்ஸ்களை அள்ளியுள்ளது. இதுவே அஜித்துக்கு முதல் 1 மில்லியன் லைக்ஸாகும். இதுவரை எந்த ஒரு தமிழ் படத்தின் ட்ரைலரையும் இவ்வளவு விரைவாக 1 மில்லியன் லைக்ஸ்களை பெற்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல #ViswasamTrailerHits1MLikes என்ற ஹேஸ்டேக்கை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்

Tamil Behind Talkies AMP · Quick view
View full