தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சதீஷ் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் ஹீரோவாக நடித்த நாய் சேகர், ஓ மை கோஸ்ட், கான்ஜூரிங் கண்ணாயிரம் போன்ற படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. தற்போது இவர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் வித்தைக்காரன். இந்த படத்தை இயக்குனர் வெங்கி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சிம்ரன் குப்தா, ஆனந்தராஜ், ஜான் விஜய், மதுசூதன் ராவ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இன்று வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் சதீஷ் அவர்கள் மேஜிக் மேனாக நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் விமான நிலையத்தில் குப்பை எடுபவராகவும் இருக்கிறார். இவர் ஏமாற்றுவதும், ஏமாற்றப்படுவதும் தப்பில்லை என்பதில் அதிக நம்பிக்கை கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் இவர் வேலை செய்யும் விமான நிலையத்தில் தங்கம், வைரம் கடத்தல் நடைபெறுகிறது.

Advertisement

இதனால்மிகப்பெரிய மாபியா தலைவர்களான மதுசூதனன் ராவ், சுப்பிரமணிய சிவா, ஆனந்த்ராஜ் ஆகியோரின் வழியில் சதீஷ் குறிக்கிடுகிறார். பின் சதீஷ் மற்றும் மாபியா கும்பலுக்கு இடையே பிரச்சனை ஏற்படுகிறது. சதிஷ் அவர்களுக்கே உதவி செய்கிறார். சதீஷ், மாபியா கும்பலுக்கு உதவி செய்ய காரணம் என்ன? அவர்களுடைய நோக்கம் என்ன? சதீஷ் இந்த மாபியா கும்பலிடம் இருந்து தப்பித்தாரா? என்பதே படத்தின் மீதி கதை.

படத்தின் ஆரம்பமே பார்வையாளர்கள் மத்தியில் கோபத்தை வர வைத்து இருக்கிறது. அந்த அளவிற்கு ஹீரோயின் என்ட்ரி சீன் இருக்கிறது. படத்தில் நாயகனாக வரும் சதீஸ் காமெடி காட்சிகள் ஓகே. ஆனால் , நடிப்பை இன்னும் கொஞ்சம் நன்றாக காண்பித்திருக்கலாம். இவர்களைத் தொடர்ந்து அடுத்தடுத்து வரும் நடிகர்களும்ஏதாவது ஒரு காமெடி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் . ஆனால், சிரிப்பு தான் வரவவில்லை. மேலும், சதீஷ் சொல்லும் படி ஆடும் கோமாளிகளாகத்தான் வில்லன்களை காண்பித்திருக்கிறார்கள்.

Advertisement

இது படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் என்றே சொல்லலாம். மொத்தத்தில் இயக்குனர் படத்திற்காக பெரிய அளவு மெனக்கடவில்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. அனுபவ நடிகர்கள் இருந்தாலும் அதை இயக்குனர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. முதல் பாதி சுமாராக இருந்தாலும் இரண்டாம் பாதி ஒன்றுமே இல்லை. படத்தில் ஆனந்தராஜ் காமெடிகள் தான் ஆறுதலை கொடுத்து இருக்கிறது. மற்றவர்கள் செய்வதெல்லாம் ரசிகர்கள் மத்தியில் கடுப்பை தான் ஏற்றி இருக்கிறது.

Advertisement

பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பெரிதாக செட்டாகவே இல்லை. ஒளிப்பதிவு ஓகே. விதைக்காரன் என்று நாயகன் படத்தில் காண்பித்தாலும் அவர் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வித்தை செய்யவில்லை.
மொத்தத்தில் ரொம்ப ரொம்ப சுமாரான படமாக விதைக்காரன் இருக்கிறது.

நிறை:

ஒளிப்பதிவு ஓகே

கதைக்களம் சுமார்

முதல் பாதி ஓகே

காமெடிகள் நன்றாக இருக்கிறது

மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு நிறைகள் எதுவும் இல்லை

குறை :

கதை களத்தில் இயக்குனர் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்

பின்னணி இசையும், பாடல்கள் படத்திற்கு செட்டாகவில்லை

காமெடி காட்சிகள் எல்லாம் கோபத்தை தான் ஏற்படுத்தி இருக்கிறது

நடிகர் சதீஷ் மற்றும் மற்ற நடிகர்கள் நடிப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்

மொத்தத்தில் வித்தைகாரன் – வேலை சரியில்லை

Advertisement