'அவருக்கு மீண்டும் வாய்ப்பளித்தால் நல்லா இருக்கும்' - அன்று விவேக் சொன்னதை இன்று நிறைவேற்றி இருக்கும் தனுஷ்.

By Rajkumar · 3/8/2022

அன்றே மறைந்த நடிகர் விவேக் கூறியிருந்ததை தற்போது தனுஷ் நிறைவேற்றி இருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் தொடங்கி ஹாலிவுட் வரை பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் இறுதியாக தனுஷ் நடித்த மாறன் திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகி இருந்தது. இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்கி இருந்தார்.

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. மேலும், இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. அதற்கு பின் தனுஷ் நானே நானே வருவேன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். கலைப்புலி எஸ் தாணு உடைய வி கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து இருக்கிறது. செல்வராகவன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார்.

தனுஷ் நடிக்கும் படங்கள்:

தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதை அடுத்து தனுஷ் அவர்கள் வாத்தி, sir போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதோடு மாதேஸ்வரன்-தனுஷ் கூட்டணியில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாக இருக்கிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் இவர் நடித்த தி கிரே மேன் என்ற படம் வெளியாகி இருந்தது.

தி கிரே மேன் படம்:

அவெஞ்சர் பட இயக்குனர்கள் இயக்கிய படம் தான் தி கிரே மேன். பிரம்மாண்ட பொருட் செலவில் வெளியாகி உள்ள இந்த படத்தில் நடிகர் தனுஷ் அவிக்சான் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். கிரிஸ் எவான்ஸ், ரியான் காஸ்லிங், அன்னா டி அர்மாஸ், ஜூலியா பட்டர்ஸ் பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. இந்த படம் தற்போது உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

https://twitter.com/dhanush_nanda/status/1554380317104160768

விவேக் அளித்த பழைய பேட்டி வீடியோ:

இந்த நிலையில் தனுஷ்- மித்ரன் ஜவஹர் குறித்து மறைந்த நடிகர் விவேக் அளித்திருந்த பேட்டி வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, உத்தம புத்திரன் படத்தை மித்ரன் ஜவஹர் தான் இயக்கி இருந்தார். இந்த படத்தில் தனுஷ், ஜெனிலியா, விவேக் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். அப்போது பேட்டியில் விவேக் அவர்கள் தனுஷ் மீண்டும் மித்ரன் ஜவஹருக்கு வாய்ப்பு அளித்தால் நன்றாக இருக்கும் என்று கூறி இருந்தார்.

திருச்சிற்றம்பலம் படம்:

அன்றே விவேக் கணித்து இருந்ததை இன்று தனுஷ் நிறைவேற்றி இருக்கிறார். தற்போது தனுஷ் அவர்கள் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ்- இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மீண்டும் இணைந்துள்ளனர். இந்த படத்தில் படத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full