நடிகர் விவேக் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘வெள்ளைப்பூக்கள்’. இந்தப் படம் இந்த மாதம் 19-ம் தேதி வெளிவரவுள்ளது. அமெரிக்காவில் கதை நடைபெறுவதாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர்.

சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பங்கேற்ற விவேக் நீண்ட நாளைக்குபிறகு நான் கதாநாயகனாக நடித்து ஒரு படம் வந்திருக்கிறது. பொதுவாகவே நான் ஹீரோவாக நடித்த படங்களுக்கு ஏதாவது ஒரு சிக்கல் வரும். ‘நான் தான் பாலா படம் வெளியானபோது கமலின் பாபநாசம் படம் வெளியாகி என் படத்தை நாசம் பண்ணியது. அதனால் இந்தப்படத்தில் நடிக்க தயங்கினேன் என்று கூறியிருந்தார்.

இதையும் படியுங்க : கணவருக்கு பயந்து நித்யா எடுத்த அதிரடி முடிவு.! இவங்களுமா விளங்கிடும்.! 

Advertisement

இந்த படத்தின் படபிடிப்பில் நடிகர் விவேக் விபத்தில் இருந்து உயிர் தப்பியுள்ளார். இந்த படத்தில் நடிகர் விவேக் துப்பறியும் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தின் ஒரு காட்சியில் அணு உலை மீது ஏறி குற்றவாளியை பின் தொடர்வது போல ஒரு காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

அதற்காக ட்ரோன் எனப்படும் பறக்கும் கேமராவை பயன்படுத்தி எடுத்துள்ளனர். 500 அடி உயரத்தை தாண்டியதும் சிக்னல் கிடைக்காததால் அந்த ட்ரான் பழுதடைந்துள்ளது. அப்போது அந்த ட்ரோன் விவேக்கை நோக்கி நெருங்கியுள்ளது. அதைக் கண்ட விவேக் சட்டென்று நகர்ந்து உள்ளார் இருப்பினும் அங்கிருந்த பாதுகாவலர் ஒருவர் அந்த
ட்ரோன் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார் ஆம் இந்த தகவலை நடிகர் விவேக் கூறியுள்ளார்.

Advertisement
Advertisement