விஜய் 63 அப்டேட் கேட்ட ரசிகர்கள்.! புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்வித்த விஜய் 63 பிரபலம்.!

By Rajkumar · 9/3/2019

சர்கார் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். தெறி, மெர்சல் போன்ற படங்களுக்கு பிறகு இந்த படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைகிறது அட்லீ-விஜய் கூட்டணி. இந்த படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவுள்ள இந்த படத்தின் அணைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் தான் எழுதுகிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியானது. இவர் ஏற்கனவே விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தில் வந்த ஆளப்போறான் தமிழன் பாடலையும், சர்கார் படத்தில் இடம்பெற்ற அணைத்து பாடல்களையும் எழுதினார்.

ஆளப்போறான் தமிழன் பாடல் உலகம் முழுவதும் பிரபலமடைந்ததால் இவரது பெயரும் பட்டிதொட்டி எங்கும் பரவியது. இதனால் தற்போது இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமும் உள்ளனர். இந்த நிலையில் வரும் ஏப்ரல் 16 ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்ட உள்ளார்.

https://twitter.com/Lyricist_Vivek/status/1103656909083631617

விஜய் ரசிகர்கள் விவேக்கின் பிறந்த நாளுக்கு இன்னும் 50 நாட்கள் உள்ள நிலையில் #50DaysToGoForLyricistVivekAnnaBday என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்துள்ளனர். மேலும், அடிக்கடி விஜய் 63 பட அப்டேட் பற்றி கேட்டுகொண்டே இருக்கின்றனர்.

ஆனால், விவேக்கோ' இவ்வளவு சீக்கிரம் தளபதி பட அப்டேட் கொடுக்க இயலாது, ஆனால் உங்களுக்கு ஏமாற்றத்தை மட்டுமே தராமல் மகிழ்விக்க தளபதியுடன் ஷூட்டிங் சமயத்தில் எடுத்த போட்டோவை பகிர்கிறேன்.” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full