விவேக் இந்துவா ? கிரிஸ்துவரா ?நினைவிடத்தில் இருக்கும் நிலுவை. விவேக்கின் வரலாறு சொல்லும் அவரின் உறவினர் ஸ்டீபன்.

By Manikandan · 11/9/2023

மறைந்த நடிகர் விவேக் கிறிஸ்துவரா? இந்துவா? என்ற சர்ச்சை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் சின்ன கலைவாணர் என்ற பட்டத்தை பெற்று என்றென்றும் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தவர் நடிகர் விவேக். இவர் 1990களின் தொடக்கத்தில் காமெடி நடிகராக இவர் பயணத்தை தொடங்கி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

பின் ஹீரோவாகவும் இவர் சில படங்களில் நடித்திருந்தார். அதோடு இவர் நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு சமூதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் இருந்தார். அதிலும் இவர் மறைந்த அப்துல்கலாமின் தீவிர ரசிகர். அவர் மீது கொண்ட பற்றின் காரணமாக இவர் லட்ச கணக்கான மரங்களை நட்டு இருந்தார். அதுமட்டும் இல்லாமல் 1 கோடி மரங்களை நடுவது தான் இவரின் கனவாக இருந்தது. ஆனால், கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

விவேக் மறைவு:

மேலும், தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கி இருந்தது. கடைசியாக இயக்குனர் சுந்தர் சியின் இயக்கத்தில் ஆர்யா நடித்து இருந்த அரண்மனை 3 திரைப்படத்தில் விவேக் நடித்து இருந்தார். இந்த படம் விவேக் மறைவுக்கு பின் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மறைந்த விவேக் அவர்கள் மிர்ச்சி சிவாவுடன் இணைந்து LOL எங்க சிரி பார்ப்போம் என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று இருந்தார்.

https://www.youtube.com/watch?v=8WmPic_gWFU

விவேக் மறைவுக்கு பின்:

இந்த நிகழ்ச்சி ஒடிடி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி இருந்தது. மேலும், விவேக் மறைந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. அதோடு விவேக்கின் கனவான கிரீன் கலாம் ஒரு கோடி மரங்கள் நடும் திட்டத்தை விவேக் அவர்களின் நண்பரும், நடிகருமான செல் முருகன் தொடங்கி இருந்தார். பின் விவேக் நினைவாக அவர் வசித்து வந்த பெருநகர சென்னை மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டலத்தில் உள்ள பத்மாவதி நகர் பிரதான சாலையை ‘சின்னக் கலைவாணர் விவேக் சாலை’ என பெயர் மாற்றம் செய்து இருக்கிறது.

விவேக் மதம் குறித்த சர்ச்சை:

இந்த நிலையில் விவேக் கிறிஸ்துவரா? இந்துவா? என்ற சர்ச்சை தற்போது சோசியல் மீடியாவில் வருகிறது. அதாவது, விவேக்கின் கொள்ளு தாத்தாவின் சமாதியில் கிறிஸ்துவ சிலை அடையாளம் குறிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பலருமே பலவிதமான சர்ச்சைகளை சோசியல் மீடியாவில் கிளப்பி வைக்கிறார்கள். இது தொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் விவேக்கின் சொந்த ஊர் பெருங்கோட்டூர். அந்த இடத்தில் அவருக்கு நினைவிடம் இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் அவருடைய தாய் தந்தையாருடைய நினைவிடமும் அதே இடத்தில் இருக்கிறது. அங்கு அவர் கொள்ளு தாத்தாவின் நினைவிடத்தில் கிறிஸ்துவ சிலுவை இருந்திருக்கிறது.

விவேக் இந்து மதம்:

இது தொடர்பாக விசாரித்த போது, விவேக் அப்பாவின் தாத்தா கிறிஸ்துவர். ஆனால், விவேக் அப்பா இந்து மதத்தை தான் கடைப்பிடித்து இருக்கிறார். அதே போல விவேக் இந்து மதத்தை தான் கடைப்பிடித்து இருக்கிறார். இவர்கள் குடும்பம் மட்டும் இல்லாமல் அந்த ஊரிலேயே பல பேர் தேவராக இருந்தாலும் கிறிஸ்தவ மதத்தையும் சேர்ந்து இருக்கிறார்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஒரு தலைமுறை கிறிஸ்தவ மதத்தையும் அடுத்த தலைமுறை இந்து மதத்தையும் சேர்ந்து இருக்கிறார்கள். ஆனால், விவேக் இந்து மதத்தை தான் பின்பற்றி இருக்கிறார் என்று அந்த ஊரை சேர்ந்தவர்கள் கூறி இருக்கிறார்கள். தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full