சினிமாவில் இருந்தே என்னை புறக்கணித்தார்கள், ஆனால் இப்போ - நடிகர் விவேக் ஓபராய் ஓபன் டாக்

By subhashini · 29/9/2025

இந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக விவேக் ஓபராய் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் பாலிவுட்டில் பிரபலமான நடிகராக இருப்பவர். இவர் தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த விவேகம் என்ற படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார். அதற்கு பிறகு தான் இவர் மிகப்பெரிய அளவில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, விவேக் ஓபராய் கேரியரை சல்மான் கான் காலி செய்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது, பாலிவுட்டில் சல்மான் கான்- ஐஸ்வர்யா இருவரும் காதலித்தது அனைவரும் அறிந்ததே. சல்மான் கான் உடன் சண்டை போட்டு பிரிந்த ஐஸ்வர்யா பிரிந்த சில காலம் விவேக் ஓபராய் உடன் தான் காதலில் இருந்தார். பின் இது தொடர்பாக 2003 ஆம் ஆண்டு நடிகர் விவேக் ஓபராய் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சல்மான் கானை கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார். அதற்குப் பிறகுதான் விவேக் ஓபராய் உடைய கேரியர் காலி செய்யப்பட்டிருக்கிறது.

விவேக் ஓபராய் குறித்த தகவல்:

இந்த நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் விவேக் ஓபராய், இப்போது அதை நினைத்து பார்த்தால் சிரிப்புதான் வருகிறது. அந்த சம்பவத்தை பற்றி எனக்கு ஒருபோதுமே கவலை இல்லை. நான் அப்போது பாலிவுட் திரை உலகத்தால் புறக்கணிக்கப்பட்டேன். எனக்கு நடந்த சம்பவம் இப்போது ஞாபகத்தில் இல்லை. ஆனால், அந்த சம்பவத்தால் என்னுடைய அம்மா ரொம்பவே மனமுடைத்து விட்டார். அவருடைய கண்ணீரை துடைப்பது தான் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது.

விவேக் ஓபராய் பேட்டி:

நான் சல்மான் கானுக்கு எதிராக பேசியதற்கு எனக்கு நிறைய அச்சுறுத்தல்கள், கொலை மிரட்டல் எல்லாம் வந்தது. அதோடு நான் அந்த நேரத்தில் பல படங்களில் கமிட்டாகி இருந்தேன். அதிலிருந்து எல்லாம் என்னை நீக்கி விட்டார்கள். என்னுடைய குடும்பத்திற்கும் பல வழிகளில் பிரச்சனை கொடுத்தார்கள். ஒரு கட்டத்தில் என்னை ஒட்டுமொத்தமாகவே பாலிவுட்டில் இருந்து புறக்கணித்து விட்டார்கள். என்னுடன் பணியாற்ற யாருமே தயாராகவில்லை. அந்த அளவிற்கு போன் கால் மிரட்டல்கள் வந்தது.

வாழ்க்கையில் பட்ட கஷ்டம்:

எனக்கு மட்டும் இல்லாமல் என்னுடைய குடும்பத்தினரையும் மிரட்டிக் கொண்டிருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் பிரச்சனை வந்ததால் நான் ரொம்பவே மன அழுத்தத்திற்கு ஆளானேன். நான் என்னுடைய அம்மாவிடம் சென்று நிறைய அழுது இருக்கிறேன். அப்போது என்னுடைய அம்மா, நீ விருதுகளை வெல்லும் போது, படங்கள் எடுக்கும் போதும், ரசிகர்கள் உன்னை நேசிக்கும் போது இந்த கேள்வியை கேட்டிருக்கிறாயா? என்று கேட்டார். மேலும், பாலிவுட்டில் விவேக் ஓபராய் புறக்கணிக்கப்பட்ட பிறகு தான் சொந்தமான தொழிலை உருவாக்கினார். தன்னுடைய தந்தையின் வழிகாட்டுதல்படி தற்போது துபாயில் 1200 கோடி மதிப்பிலான தொழில்களை விவேக் ஓபராய் செய்து வருகிறார். தற்போது விவேக் ஓபராய் ரியல் எஸ்டேட், பொழுதுபோக்கு, நிதி துறையில் சாதித்து வருகிறார். இது அனைத்தும் பாலிவுட்டில் புறக்கணிக்கப்பட்ட பிறகு தான் நடந்தது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full