தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் நடிகர் விவேக். நகைச்சுவையின் மூலம் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விவேக். இவரின் காமெடியில் நகைச்சுவையும், சமூக சிந்தனையும் இருக்கும். அதனால் தான் இவரை மக்கள் ‘சின்ன கலைவாணர்’ என்று அழைத்து வருகின்றனர். இவர் மேடை நகைச்சுவை கலைஞராக தான் தனது பயணத்தை தொடங்கினார். இவர் 1987 ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார்.

மேலும், விவேக் எப்பொழுதுமே ட்விட்டரில் ஆக்டிவாக இருப்பவர். நாட்டு நடப்பு, சினிமா என்று பல விஷயங்கள் பற்றி பேசி வருகிறார். சமீபத்தில் தன்னை பற்றி வந்த மீம் குறித்து பாராட்டிய விவேக் ‘ஒரு படத்தை வச்சிக்கிட்டு என்னவெல்லாம் சொல்ரீங்க!! யாரை எல்லாம் ஓட்டுரீங்க!! “Memes பசங்க ஐடியா உள்ள பசங்க.‘என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில் மீம்ஸ் கிரியேட்டர்கள் நடிகர் வடிவேலுவை வைத்து தலைவர் என்று கூறி வடிவேலுவின் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டு உள்ளார்கள். அதற்கு விவேக்கை மென்ஷன் செய்து உள்ளார்கள்.

Advertisement

அந்த வீடியோவை பார்த்த விவேக் அவர்கள் கூறி இருப்பது, உண்மை. வடிவேலுவைப் போல் மீம் கிரியேட்டர்க்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் எவரும் இல்லை. வாழ்க அவர் நகைச்சுவைப் பணி என்று கமெண்ட் போட்டுள்ளார். இவரின் டீவ்ட்க்கு நெட்டிசன்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

சமீபத்தில் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்த தாராள பிரபு படத்தில் விவேக் டாக்டர் கண்ணதாசனாக நடித்து அசத்தியிருந்தார். வடிவேலுவை கடைசியாக பெரிய திரையில் பார்த்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. இருப்பினும் மீம்ஸுகள் மூலம் அவரை தினம் தினம் சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. எந்த சூழலுக்கும் பொருந்தும் வகையில் உள்ளது வடிவேலுவின் முக பாவனைகள் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement
Advertisement