சீரியசான சண்டை காட்சியில் அந்நியன் விக்ரம் போல மாறி மாறி காமெடி செய்துள்ள விவேக்- டெலீட் செய்யப்பட்ட வீடியோ இதோ.

By Rajkumar · 7/5/2020

ஒரு திரைப்படத்தில் இருக்கும் காமெடி காட்சிகள் மக்கள் சிரிப்பதற்கு மட்டுமே இருந்தது. காமெடி காட்சிகளை பார்த்து சிரிப்பதையும் தாண்டி அதில் சிந்திக்கவும் வைத்தவர் பிரபல காமெடி நடிகர் விவேக். இவரது காமெடி காட்சிகளில் கண்டிப்பாக ஒரு மெசேஜும் இருக்கும். அது நம் சமுதாயத்திற்கு தேவையான ஒரு கருத்தாக நிச்சயம் இருக்கும். ஆகையால், ரசிகர்கள் இவரை பாசத்துடன் 'ஜனங்களின் கலைஞன்' என்று அழைத்து வருகின்றனர்.

பல முன்னணி நடிகர்களின் படங்களில் விவேக் காமெடியனாக வலம் வந்திருக்கிறார். சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து அசத்தியிருக்கிறார் விவேக். இவரது நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு 'தல' அஜித்தின் 'விஸ்வாசம்', 'தளபதி' விஜய்யின் 'பிகில்' மற்றும் 'வெள்ளைப் பூக்கள்' என மூன்று படங்கள் வெளி வந்தது. இதில் 'வெள்ளைப் பூக்கள்' படத்தில் விவேக்கே கதையின் நாயகனாக நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : சரக்கு கிடைக்குமா ? ரசிகர்களை சுண்டி இழுத்த வாலு பட நடிகை அர்ச்சனா மாரியப்பன் வீடியோ.

அந்த படத்தை அறிமுக இயக்குநர் விவேக் இளங்கோவன் இயக்கியிருந்தார். மற்ற இரண்டு படங்களிலும் (விஸ்வாசம் மற்றும் பிகில்) காமெடியில் கலக்கியிருந்தார் விவேக். கடைசியாக விவேக் காமெடியனாக நடித்த படம் 'தாராள பிரபு'. இப்படம் இந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் 13-ஆம் தேதி வெளி வந்தது. இதில் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் நடித்திருந்தார். இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கியிருந்த இப்படத்தில் ஹீரோயினாக நடிகை தன்யா ஹோப் நடித்திருந்தார்.

https://twitter.com/Actor_Vivek/status/1257984855398207488

உலகமெங்கும் தற்போது 'கொரோனா' எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், '144' போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 'கொரோனா' பிரச்சனை முடிந்த பிறகு, மீண்டும் 'தாராள பிரபு' ரிலீஸ் செய்யப்படுமாம். இந்நிலையில், காமெடி நடிகர் விவேக் சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருக்கிறார்.

இது 'சிவாஜி' என்ற படத்தில் விவேக் நடித்து பின் நீக்கப்பட்ட காட்சியாம். விவேக், விக்ரமின் 'அந்நியன்' படத்தில் இடம்பெற்ற ஒரு சூப்பர் காட்சியை போல் இதிலும் நடித்திருக்கிறார். இக்காட்சியின் வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தினை பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடித்திருந்தார்.

behindtalkies AMP · Quick view
View full