தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் நடிகர் விவேக். நகைச்சுவையின் மூலம் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விவேக். இவரின் காமெடியில் நகைச்சுவையும், சமூக சிந்தனையும் இருக்கும். அதனால் தான் இவரை மக்கள் ‘சின்ன கலைவாணர்’ என்று அழைத்து வருகின்றனர். இவர் மேடை நகைச்சுவை கலைஞராக தான் தனது பயணத்தை தொடங்கினார்.

இவர் 1987 ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார். விவேக்கின் படங்களில் வரும் காமெடிகளில் சமூக கருத்துக்களை சொல்வது வாடிக்கையான ஒரு விஷயம் தான். மேலும், இவரது கலை பயணத்தை பாராட்டி 2009 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது கூட வழங்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இவர், சமீபத்தில் தேசிய விருது பெற்ற விஜய் சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

Advertisement

இந்தியாவில் ஆண்டு தோறும் தேசிய விருது அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு இருந்த தேசிய விருது பட்டியலில் பல்வேறு தமிழ் திரைப்படங்கள் இடம்பெற்றது. அசுரன் படத்தில் நடித்ததற்காக தனுஷூக்கு சிறந்த நடிகருக்கான விருதும், சிறந்த திரைப்படமாக அசுரன் திரைப்படமும் அறிவிக்கப்பட்டது. அதே போல தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய்சேதுபதிக்கு சிறந்த துணை நடிகர் விருதும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

விஜய்சேதுபதி ஃபகத் பாசில் சமந்தா ரம்யாகிருஷ்ணன் மிஷ்கின் மிருணாளினி என்று பலர் நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதி முதல் முறையாக தேசிய விருது கிடைத்ததற்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த வகையில் தேசிய விருது வென்ற விஜய் சேதுபதிக்கு வாழ்த்துக்கள் என்று ட்வீட் செய்திருந்தார்.

Advertisement

விவேக்கின் இந்த பதிவிற்கு ட்விட்டர் வாசி ஒருவர் ‘சார், நீங்க எதும் வாங்கலயா’ என்று பதிவிட்டார். இதற்கு பதில் அளித்துள்ள விவேக் ‘ரசிகர்களின் அன்பே ஒரு விருது தானே! 35 ஆண்டுகளாக அதை வருடாவருடம் வாங்கிக் கொண்டு இருக்கிறேனே’ என்று கூறியுள்ளார். விவேக்கின் இந்த பதிவை பார்த்த சிலர் ‘உங்கள் சமூக அக்கறைக்கு தேசிய விருது பத்தாது ஐயா.அதுக்கும்மேல ஒரு விருது வேண்டும்’ என்று விவேக்கிற்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளனர்.

Advertisement
Advertisement