நீ ஆண்டினு கூப்டது தப்பில்லபா. ஆனால் - கேலி செய்தவருக்கு அஞ்சனா கொடுத்த செம பதிலடி.
தன்னை ஆன்டி என்று அழைத்தவருக்கு Vj அஞ்சனா பதிலடி கொடுத்துள்ளார். பிரபல சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து வந்தவர் வி ஜே அஞ்சனா, தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான “கயல்” படத்தில் நடித்த நடிகர் சந்திரனை திருமணம் செய்து கொண்டு இவர்கள் இருவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அழகான ஆண் குழந்தை பிறந்ததது. இதனால் பலரும் இவருக்கு வாழ்த்து மழைகளை பொழிந்து வந்தார்கள்.
நீண்ட வருடங்களாக காதலித்து வந்த இந்த இளம் ஜோடியினருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இரு இவர்கள் இருவரது திருமணமும் கோடம்பாக்கத்தில் உள்ள கோவில் ஒன்றில் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்றது. சந்திரன் – அஞ்சனா தம்பதியருக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு ருத்ராக்ஸ் என்று பெயர் வைத்தனர்.
இதையும் பாருங்க : கொரோனா இரண்டாம் அலைக்கு நடுவே இரண்டாம் திருமணத்தை முடித்த விஷ்ணு விஷால் - இதோ புகைப்படங்கள்.
குழந்தை பிறந்த பின்னர் அஞ்சனா தொகுப்பாளினி பணியை தொடர்ந்து செய்வாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், குழந்தை பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தனது தொகுப்பாளினி பணிக்கு திரும்பினார். ஆனால், இம்முறை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக களமிரங்கினார் அஞ்சனா. மேலும், ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு வந்தது குறித்து பேசிய அஞ்சனா, பத்து வருடங்களாக சன் ம்யூசிக்கில் இருந்து விட்டேன் நான் பிரேக் எடுத்த பின்னர் பலர் என்னை மீண்டும் வரச் சொல்லி அணுகினார்கள்.எனவே, தொகுப்பாளினியாக மீண்டும் பணியாற்ற விரும்பினேன் என்று கூறி இருந்தார்.
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சனா அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் தனது பாலோவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதாக கூறி இருந்தார். அப்போது ரசிகர் ஒருவர், 'என்ன கேக்கலாம் ஆன்டி கிட்ட' என்று கேலியாக கூறி இருந்தார். இதற்கு பதில் அளித்த அஞ்சனா 'எனக்கு கூட தான் உன்ன அசிங்கமா கேக்கணும் போல இருக்கு. கேளு, யோசிச்சி கேளு ' என்று கூறி இருந்தார்.
அஞ்சனாவின் இந்த பதிலை சற்றும் எதிர்பாராத அந்த ரசிகர் 'ஆன்டினு சொன்னதுக்கு இவ்ளோ கோவமா ? என்று கேட்டிருந்தார். அதற்கு அஞ்சனா 'நீ ஆன்டினு கூப்பிட்டது தப்பில்லபா, ஆனா ஆன்டிங்கர வார்த்தைய ஒரு இன்சல்டிங் ஜோக் மாதிரி யூஸ் பண்ணது தான் தப்பு. ஒரு பெண் பலருக்கு ஒரு எழுச்சியாக இருப்பாள். எவ்வளவு வயதாகிறதோ அவ்வளவு பேருக்கு அவள் கற்றுக் கொடுப்பாள்' என்று பதில் கூறி உள்ளார்.