யோகிபாபுவை நான் அசிங்கப்படுத்தினேனா? எதுக்கு மன்னிப்புக் கேட்ணும் - தொகுப்பாளினி பாவனா விளக்கம்

By subhashini · 31/8/2025

தமிழ் சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் ஜெயம் ரவி.
தற்போது இவர் தயாரிப்பாளராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். கடந்த வாரம் தான் ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். சென்னையில் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் உடைய தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது. சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்தியிருந்தார்கள். மேலும், இதில் இவர் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிக்கும் படத்தை தான் முதலாக தயாரிக்கிறார்.

https://www.youtube.com/watch?v=3-ha0MnhG3g

இரண்டாவது படத்தை ரவி மோகன் இயக்குகிறார். அந்த படத்தில் யோகி பாபு தான் நடிக்கிறார். இரண்டு படங்களுக்குமான பூஜையுமே இந்த நிகழ்வில் போடப்பட்டது. இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளினி பாவனா தொகுத்து வழங்கி இருந்தார். அப்போது நிகழ்ச்சியில் தொகுப்பாளனி பாவனா, எல்லோரிடமும் மைன்ட் கேம் விளையாடி இருந்தார். அப்போது பாவனா, உங்கள் மைண்ட் வாய்ஸ் என்ன? என்று கேட்டிருக்கிறார். அதற்கு யோகி பாபு, என்னை வைத்து ரவி சார் படம் பண்ணுகிறார். அந்த படம் நன்றாக வரணும். அவருடைய தயாரிப்பு நிறுவனமும் நல்லபடியாக வளரனும் என்று சொன்னார்.

பாவனா-யோகி பாபு சர்ச்சை:

உடனே பாவனா, நல்லவர் மாதிரி பேசுறீங்க, அதை தாண்டி என்ன நினைக்கிறீங்க என்று கேட்டார். அதற்கு யோகி பாபு, நான் பின்னாடி நிற்கும் போது அந்த மனுஷனுக்கு வழி விடாதீங்க, சேர் போடாதீங்கன்னு உன்ன மாதிரி நான் நினைக்காமல் நல்லது தான் நினைத்தேன் என்று சொன்னார். இப்படி இவர்கள் இருவரும் பேசி இருப்பதை தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையாக்கி இருக்கிறார்கள். பலருமே பாவனாவின் செயலில் கண்டித்தும் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்து பாவனா வீடியோ ஒன்றை போட்டு இருக்கிறார். அதில் அவர், மக்களே எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. நானும் யோகி பாபுவும் ஜாலியாக பேசிக் கொண்டதை பலருமே தவறான கோணத்தில் பார்க்கிறார்கள்.

பாவனா வீடியோ:

இதற்கு முன்பு நானும் யோகி பாபுவும் ஜாலியாக பேசிக்கொள்வோம். அதை எல்லாம் நீங்கள் பார்த்து உள்ளீர்களா? குறிப்பாக ஐபிஎல் சமயங்களில் சிஎஸ்கே போட்டி போது நாங்கள் இதே மாதிரி தான் ஜாலியாக பேசுவோம். வெறும் 31 நொடி வீடியோ வைத்துவிட்டு யோகி பாபுவை நான் அசிங்கப்படுத்திவிட்டேன் என்று பலருமே கதை கட்டுகிறார்கள். யோகி பாபுவை எனக்கு நான் பல வருடங்களாக நன்றாக தெரியும். நாங்கள் ஜாலியாகத்தான் பேசுவோம். அதைப் புரிந்து கொள்ளாமல் சில உதவாக்கரைகள் வெறுப்பை பரப்புகிறார்கள். இதில் நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார்கள்.

சர்ச்சைகளுக்கு விளக்கம்:

நான் கேட்கும் கேள்விகளை என்ன அர்த்தத்தில் கேட்கிறேன் என்று நன்றாகவே யோகி பாபு புரிந்து கொண்டார். அதனால் தான் அவரும் அதற்கு ஏற்றவாறு பதில் அளித்தார் சில முட்டாள் மக்கள் நாங்கள் இருவருமே ஜாலியாக பேசி இருப்பதை தேவையில்லாமல் ஏதேதோ எங்களுக்கிடையில் ஈகோ பிரச்சனையை இருப்பது போல சில உள்ளடி வேலைகள் பார்க்கிறார்கள். ஆனால், இதெல்லாம் இங்கு பலிக்காது. நாங்கள் இருவரும் நிகழ்ச்சி முடிந்து கூட ஜாலியாகத்தான் பேசி இருந்தோம் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full