விஜய்ல இப்போலலாம் இப்படி தான் பண்றங்க, இனி அந்த பக்கமே போக மாட்டேன் - Vj பாவனா சொன்ன காரணம்.

By Rajkumar · 13/5/2022

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பிரபலமாகுவதற்கு முன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் மக்கள் மனதில் என்றென்றும் நீங்கா இடம் பிடித்து விடுகிறார்கள். அந்த வகையில் ஒரு காலத்தில் விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக திகழ்ந்தவர் பாவனா. இவர் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

பின் இவருக்கு கிரிக்கெட் விளையாட்டை தொகுத்து வழங்கும் வாய்ப்பு வந்தவுடன் அங்கு சென்று விட்டார். பிறகு விஜய் டிவி பக்கமே வரவில்லை. கிரிக்கெட், படத்தின் விழா, நிகழ்ச்சி மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார். மேலும், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சின்னத்திரை பக்கம் பாவனா வந்திருக்கிறார். தற்போது கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஷோவை பாவனா தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.

பாவனா அளித்த பேட்டி:

இந்நிலையில் சமீபத்தில் இவரிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அதில் அவர் பல சுவாரஸ்யமான விஷயங்களை கூறியிருக்கிறார், டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ஸ்போர்ட்ஸ் ஆங்கரிங்காக கால் பண்ணும்போது ஆரம்பத்தில் எனக்கு பயமாக இருந்தது. ஒரு தயக்கத்துடன் தான் நான் மும்பை போனேன். ஆனால், சில நாட்களிலேயே எனக்கு செட் ஆகிவிட்டது. அதனாலேயே நான் அங்கேயே நிறைய நிகழ்ச்சிகள் பண்ணுவது என்று செய்துகொண்டிருந்தேன்.

பாவனா தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள்:

மேலும், பெரிய ஜாம்பவான்கள் கூட நானும் இருந்தேன் என்பதை நினைத்தால் எனக்கு ரொம்ப சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. இது ஒரு பக்கமிருக்க எல்லோரும் விஜய் டிவி பக்கம் போவீங்களா? என்று கேட்டார்கள்.ஐபிஎல், உலக கோப்பை ஸ்போர்ட்ஸ் உடன் தலைவி, RRR சினிமா நிகழ்ச்சியை தொகுத்து வந்தேன். இதற்கு கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும். சமீபத்தில் ஐபிஎல் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியை கொண்டாடிய நிகழ்வை நான்தான் தொகுத்து வழங்கினேன்.

விஜய் டிவி பற்றி பாவனா கூறியது:

முதலமைச்சர் ஸ்டாலின், தோனி ரெண்டு பேரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்கள். அந்த நிகழ்ச்சியை நான் மறக்கவே முடியாது. இது ஒரு பக்கம் இருக்க, எல்லோரும் நீங்கள் விஜய் டிவி பக்கம் போவீங்களா? என்று கேட்டார்கள். அதற்கு நான் இனி விஜய் டிவி பக்கம் போகவேண்டாம் என்று நினைத்திருக்கிறேன். ஏன்னா, அவங்க ஸ்டைல் வேற, இப்ப என் ஸ்டைல் வேற ஆகிவிட்டது. மேலும், அவங்க இப்ப நிகழ்ச்சியை காமெடியாக கொண்டு போவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள்.

பாவனாவுக்கு கிடைத்த கலர்ஸ் தமிழ் வாய்ப்பு:

எனக்கு அதில் அவ்வளவாக ஈடுபாடு இல்லை. அதைவிட ஜெயா டிவியில் முதன் முதலாக எனக்கு வாய்ப்பு வெங்கட் ரமணி சார் தான் கலர்ஸ்-தமிழ் சோவுக்கு கூப்பிட்டார். நாம் எவ்வளவு உயரத்தில் போனாலும் கடந்து வந்த பாதையை மறக்கக் கூடாது என்று நினைத்து தான் நான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறேன். இப்போது கலர்ஸ்-தமிழ் டீமுடன் ஜாலியாக போகிறது என்று கூறினார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full