சூப்பர் சிங்கர் மூலமா fame ஆகிட்டு இப்போ அதையே கலாய்க்கிறீங்க - பாவனாவிற்கு ரசிகர்கள் கமண்ட்

By Rajkumar · 12/6/2023

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பிரபலமாகுவதற்கு முன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் மக்கள் மனதில் என்றென்றும் நீங்கா இடம் பிடித்து விடுகிறார்கள். அந்த வகையில் ஒரு காலத்தில் விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக திகழ்ந்தவர் பாவனா. இவர் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

பின் இவருக்கு கிரிக்கெட் விளையாட்டை தொகுத்து வழங்கும் வாய்ப்பு வந்தவுடன் அங்கு சென்று விட்டார். பிறகு விஜய் டிவி பக்கமே வரவில்லை. கிரிக்கெட், படத்தின் விழா, நிகழ்ச்சி மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார். மேலும், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சின்னத்திரை பக்கம் பாவனா வந்திந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிவந்த டான்ஸ் ஷோவை பாவனா தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்.

ஸ்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் பயணம் :

ஆனால், இவருக்கு பெரிதும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்த விஜய் டிவி பக்கம் வராமல் இருக்கிறார். அதே போல பல திரைப்பட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பாவனா ஸ்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் சேனலில் நிரந்தர கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வருகிறார். மேலும், சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ்களை பதிவிட்டு வருவது வழக்கம்.

View this post on Instagram

A post shared by Bhavna Balakrishnan (@bhavnabalakrishnan)

சூப்பர் சிங்கரை கலாய்த்து வீடியோ :

மேலும், இவர் ஆங்கர் என்பதை தாண்டி சிறப்பாக நடமும் ஆடுவர் நன்றாகவும் பாடுவார். இப்படி ஒரு நிலையில் இவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஆங்கர்களுடன் சூப்பர் சிங்கர் ஆடிஷன் ஐபில் எடிஷன் என்று வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் நீங்கள் நன்றாக படுகிறீர்கள் ஆனாலும் உங்களுக்கு புகழை ஏற்படுத்தி கொடுத்த நிகழ்ச்சியை இப்படி கேலி செய்யலாமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விஜய் டிவி குறித்து பாவனா :

ஏற்கனவே இன்ஸ்டா லைவ் ஒன்றில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்த போது, ரசிகர் ஒருவர் நீங்கள் விஜய் டிவி பக்கம் போவீங்களா? என்று கேட்டார்கள். அதற்கு நான் இனி விஜய் டிவி பக்கம் போகவேண்டாம் என்று நினைத்திருக்கிறேன். ஏன்னா, அவங்க ஸ்டைல் வேற, இப்ப என் ஸ்டைல் வேற ஆகிவிட்டது. மேலும், அவங்க இப்ப நிகழ்ச்சியை காமெடியாக கொண்டு போவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள்.

கலர்ஸ் தமிழ் குறித்து பாவனா :

எனக்கு அதில் அவ்வளவாக ஈடுபாடு இல்லை. அதைவிட ஜெயா டிவியில் முதன் முதலாக எனக்கு வாய்ப்பு வெங்கட் ரமணி சார் தான் கலர்ஸ்-தமிழ் சோவுக்கு கூப்பிட்டார். நாம் எவ்வளவு உயரத்தில் போனாலும் கடந்து வந்த பாதையை மறக்கக் கூடாது என்று நினைத்து தான் நான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறேன். இப்போது கலர்ஸ்-தமிழ் டீமுடன் ஜாலியாக போகிறது என்று கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full