Vj சித்ரா நிச்சயதார்த்த புகைப்படத்தை டாட்டுவாக குத்திய ரசிகர் - வைரலாகும் வீடியோ.

By subhashini · 27/12/2021

மறைந்த முல்லை சித்ராவின் புகைப்படத்தை மார்பில் டாட்டுவாக குத்திய ரசிகரின் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகை சித்ரா தொகுப்பாளினி, நடிகை, நடனம், மாடலிங் என பல திறமைகளைக் கொண்டவர். இவர் முதன் முதலாக மக்கள் டிவியில் தொகுப்பாளினி அறிமுகமானவர். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து வந்தார். அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தார்.

இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி டிஆர்பியில் முன்னிலை வகிக்கும் தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஒன்று. பல இல்லத்தரசிகளின் பேவரைட் சீரியல்களில் இதுவும் ஒன்று. இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சித்ரா. இவர் சித்ரா என்பதைவிட முல்லையாகவே அனைவரின் மனதிலும் வாழ்ந்தார்.

சித்ராவின் நிச்சயதார்த்தம் :

அதுமட்டுமில்லாமல் சித்ராவுக்காகவே இந்த சீரியலை பார்க்கும் ஒரு தனி ரசிகர் கூட்டமே இருந்தது. இதனிடையே சித்ராவுக்கும், ஹேம்நாத் என்பவருக்கும் ஆகஸ்ட் 25ஆம் தேதி 2020 ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது. இது விஜய் டிவியில் கூட மிகப் பிரபலமாக ஒளிபரப்பி இருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் இருவரும் 2021 பிப்ரவரி மாதம் திருமணம் செய்ய இருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக நடிகை சித்ரா ஹோட்டலில் டிசம்பர் 9ஆம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

https://twitter.com/chettyrajubhai/status/1475432757887045633

இவருடைய தற்கொலை பலபேருக்கு பேரிடியாக இருந்தது. மேலும், இன்னும் சித்ரா இல்லை என்பதை யாராலும் நம்ப முடியவில்லை. மேலும், இந்த விவகாரத்தில் அவரது கணவர் ஹேம்நாத் தான் தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டு ஜெயில் அடைக்கப்பட்டார். ஆனால், கொஞ்சம் நாட்களிலேயே அவர் ஜாமீன் வெளியில் வந்துவிட்டார். அதுமட்டுமில்லாமல் அவருடைய தற்கொலைக்கான சரியான காரணமும் இப்போது வரை தெரியவில்லை.

ஓராண்டை கடந்த சித்ராவின் இறப்பு :

அதோடு 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதியுடன் சித்ரா உடைய ஓராண்டு மறைவு தினம் வந்தது. இதற்கு ரசிகர்களும் பிரபலங்களும் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் மறைந்த நடிகை சித்ராவின் தீவிர ரசிகர் ஒருவர் செய்த செயல் தற்போது சோசியல் மீடியாவில் டிரெண்டிங் ஆகி வருகிறது. அதுஎன்னவென்றால், மறைந்த நடிகை சித்ராவின் நிச்சயதார்த்த புகைப்படத்தை தீவிர ரசிகர் ஒருவர் தனது மார்பில் டாட்டுவாக குத்தி உள்ளார்.

டாட்டூவாக குத்திய நபர் :

தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த டாட்டுவாக ரசிகர்கள் அனைவரும் கண்கலங்கி உள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த வீடியோவை வைரலாகியும் வருகிறார்கள். மேலும், நடிகை சித்ரா கடைசியாக நடித்த calls திரைப்படமும் வெளியாகி இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full