சித்ரா தற்கொலையில் முன்னாள் அமைச்சர் தொடர்பா ? ஜெயக்குமாரிடம் கேட்ட நிருபர். அதற்கு அவர் கொடுத்த பதிலை பாருங்க.

By subhashini · 2/5/2022

நடிகை சித்ரா தற்கொலை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் சித்ராவை யாராலும் மறக்க முடியாது. தான் வாழ்ந்த கடைசி நாட்களில் முல்லை என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சித்ரா. இவருடைய மரணம் இன்றும் யாராலும் நம்பவும் முடியவில்லை, ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதை பாதித்த ஒன்று. இவர் சாதாரண குடும்பத்தில் பிறந்து தன்னுடைய கடும் உழைப்பினாலும், விடா முயற்சியினாலும் இந்த அளவிற்கு மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.

மேலும், விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சிக்கு பார்வையாளராக வந்த இவர் அதே சேனலில் பிரபலமான சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இப்படி புகழின் உச்சத்தில் இருந்த சித்ரா தூக்கிட்டு மர்மமான முறையில் இறந்த சம்பவம் பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. சித்ரா அவர்கள் சீரியல் ஷூட்டிங்குக்காக பூந்தமல்லி அருகே பெங்களூரு பைபாஸ் சாலையில் அமைந்திருக்கும் ஹோட்டலில் தனது கணவர் ஹேமந்த்துடன் தங்கியிருந்தார். அப்போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

சித்ராவின் மரணம்:

இவர் தற்கொலைக்கு முழுக்க முழுக்க அவர் கணவர் ஹேமநாத் தான் காரணம் என்று சித்ராவின் பெற்றோர்கள் புகார் அளித்து இருந்ததால் ஹேம்நாத்தை போலீஸ் கைது செய்து விசாரித்து இருந்தது. அதன் பின் அவர் ஜாமீனில் வெளியே வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சில மாதங்களுக்கு முன் தான் சித்ரா உடைய முதலாம் ஆண்டு நினைவு தினம் வந்தது. இவர் இறந்து ஒரு ஆண்டு முடிந்துவிட்டது. ஆனால், இவருடைய திடீர் மரணத்திற்கு காரணம் என்ன? தற்கொலையா? கொலையா? அதற்கு காரணமானவர்கள் யார்? சித்ராவிற்கு நீதி கிடைத்ததா? என்று இன்னும் விடை தெரியாமல் இருக்கின்றது.

சித்ரா மரணம் குறித்து ஹேம்நாத் அளித்த பேட்டி:

இப்படி ஒரு சூழ்நிலையில் சித்ராவின் மரணத்தில் திடுக்கிடும் தகவலை சித்ராவின் கணவர் ஹேம்நாத் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். சித்ரா மரணத்திற்கு காரணமான அரசியல் தலைவரால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அரசியல் தலைவர் யார்? என்பது பற்றிய விவரம் வெளியாகும். சித்ரா மரணத்திற்கு காரணமானவர்கள் தற்போது என் உயிருக்கும் குறி வைத்து இருக்கின்றனர். சித்ரா மரணத்திற்கு அரசியல்வாதிகள் தான் காரணம். எனக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை என்று கூறியிருக்கிறார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி:

இப்படி ஹேமநாத் அளித்து இருந்த பேட்டி சோஷியல் மீடியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதோடு சித்ரா மரணம் தற்கொலை என்றிருந்த நிலையில் தற்போது அரசியல் தலைவர் தொடர்பு இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் ஹேம்நாத் கூறிய புகாருக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சென்னை வேப்பேரியில் செய்தியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர், திமுக ஆட்சி குறித்து பல விஷயங்களை பேசி இருந்தார்.

சித்ரா மரணம் குறித்து ஜெயக்குமார் கூறியது:

பின் சித்ராவின் தற்கொலைக்கு முன்னாள் அமைச்சருக்கு தொடர்பு என்று ஹேம்நாத் அளித்த புகார் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ஜெயக்குமார் கூறி இருப்பது, நடிகை சித்ராவின் மரணத்தில் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் விவாகரத்தில் மறுவிசாரணை நடத்த எந்த பிரச்சினையுமில்லை. மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை. உண்மை குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடிக்க வேண்டும் என்று ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் போலீசார் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா? சித்ராவின் தற்கொலைக்கு நியாயம் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full