நான் பீரியட்ஸ் டைம்ல என்ன செய்யணும், செய்ய கூடாதுன்னு நீங்க சொல்லாதீங்க - பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை தீபிகா அதிரடி பேச்சு
பிரபல நடிகை விஜே தீபிகா, சமீபத்தில் பீரியட்ஸ் குறித்து அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இருக்கும் காலகட்டத்தில் சினிமா நடிகையை விட சீரியல் நடிகைகளுக்கு தான் இலசுகள் மத்தியில் ஏகப்பட்ட ரசிகர்கள் அதி விரைவில் உருவாகிய விடுகின்றனர். அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு பல நடிகைகள் சென்று உள்ளனர். வாணி போஜன், பிரியா பவானி சங்கர் என்று பலரும் சின்னத்திரையில் இருந்து சென்றவர்கள் தான். அந்தவரிசையில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 1' சீரியல் மூலம் விஜே தீபிகா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் என்று சொல்லலாம்.
ஆனால் சின்னத்திரை நடிகர்களுக்கு இன்று மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறதோ, அந்த அளவிற்கு அவர்களுக்கு தொழிலில் போட்டியும் உள்ளது. ஒரு நல்ல வாய்ப்பை பெறுவது எளிதான விஷயம் இல்லை. நிறைய நடிகர்கள் எக்கச்சக்கமான திறமைகள் இருந்தும் வாய்ப்பு கிடைக்காததால் சின்னத்திரையை விட்டு காணாமல் போயிருக்கிறார்கள். அப்படி எல்லா தடைகளையும் கடந்து வெற்றி நடை போடுபவர்கள் சில தான். அந்த வகையில் விஜே தீபிகாவும் அடங்குவார்.
விஜே தீபிகா குறித்து:
விஜே தீபிகா, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். சென்னைக்கு படிக்க வந்த அவர், பார்ட் டைம் ஆக நடிக்க வாய்ப்புகள் தேடி கேரியரை அமைத்துக் கொண்டார். 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 1' சீரியலில் நடித்த இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது என்று சொல்லலாம். விஜே தீபிகா அவ்வப்போது சில டிவி ஷோக்களில் ஆங்கரிங் செய்து வருகிறார். மேலும், இவர் தனது யூடியூப் சேனலிலும் வீடியோக்கள் போடுவதின் மூலம் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக உள்ளார்.
விஜே தீபிகா பேட்டி:
சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த விஜே தீபிகா பேசிய சில விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. அதில் அவர், எங்க வீட்டில் மூன்று பெண் பிள்ளைகள், என்னுடைய அம்மாவையும் சேர்த்து நாங்கள் நாலு பேர் பெண்கள். ஒவ்வொரு வாரமும் யாராவது ஒருத்தருக்கு பீரியட்ஸ் வந்து விடும். அந்த சமயங்களில் அவர்களை பூஜை மற்றும் பண்டிகை நாட்களில் கலந்து கொள்ள விடாமல் தனியாக இருக்க வைப்பார்கள். ஆனால் அந்த பழக்கத்தை எங்கள் வீட்டில் மாற்றியவர் எங்க அப்பா தான்.
பீரியட்ஸ் டைமில் கோவிலுக்கு போவேன்:
மேலும், என்னுடைய குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த பூஜை எல்லாம் செய்கிறேன். அவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு என்னால் சாமி கும்பிட முடியாது என பீரியட்ஸ் நேரங்களிலும் எங்களை அழைத்து சாமியும் கும்பிட வைப்பார். காலப்போக்கில் அதுவே எங்களுக்கு பழக்கமாக மாறிவிட்டது. நான் தினமும் நான் வெஜ் சாப்பிடுவேன். அதேபோல், நான் வெஜ் சாப்பிட்டாலும் சரி, பீரியட்ஸ் இருந்தாலும் சரி நான் கோயிலுக்கு போய் சாமி கும்பிடுவேன் என்று கூறியுள்ளார்.
https://www.youtube.com/shorts/cC5HL171nH4
நீங்கள் யார் கேட்பதுக்கு:
அதைத் தொடர்ந்து, அவர் என்னுடைய அய்யனார், எனக்கு உடம்பு சரியில்லை என்றாலும் அவர் பார்த்துப்பார். அவரைப் பற்றி எனக்கு தெரியும், அவர் என்னை ஒதுக்கி வைக்க மாட்டார். நான் வெளியே போகும் போது குங்குமம், சந்தனம் வைக்கணும் என்றால் நான் வைத்துக் கொள்வேன். அதேபோல் பூஜை அறையில் உட்கார்ந்து அழணும்னு தோணுச்சுன்னா அழுவேன். இதனால் நீங்க யார் அதை சொல்வதற்கு? எந்த டேட்ல போகணும் போக கூடாதுன்னு நீங்க சொல்லாதீங்க என்று மிகவும் துணிச்சலாக விஜே தீபிகா பேசி உள்ளார். அவரின் இந்த கருத்தை ஒருபுறம் பலரும் பாராட்டி வந்தாலும், மறுபுறம் சிலர் தீபிகாவை திட்டி விமர்சனங்கள் எழுப்பி வருகின்றனர்.