அவருக்கும் இந்த முடிவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது - வதந்தி பற்றி 'நீ நான் காதல்' தனுஷிக் சொன்ன விஷயம்

By subhashini · 5/2/2025

நீ நான் காதல் சீரியலில் இருந்து முக்கிய நடிகை விலகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் ஒன்று நீ நான் காதல். இந்த சீரியல் Iss Pyaar Ko Kya Naam Doon என்ற சீரியலின் தமிழ் ரீமேக் ஆகும். இந்த சீரியலில் ஹீரோவாக பிரேம் ஜாக்கோவும், ஹீரோயின் ஆக வர்ஷினி சுரேஷ் நடிக்கிறார்கள். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கப்பட்ட இந்த சீரியல் சுமார் ஒரு வருடத்தை கடந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வாய்ப்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடரில் சங்கரேஸ் குமார், நவீன் முரளிதரன், சரவணன், ஷீலா, தமிழ்ச்செல்வி, கிரிஷ், சங்கீதா பாலன், ஹர்ஷா நாயர், மதுமிதா இளையராஜா பாலன் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
மேலும், இந்த சீரியலில் ஹீரோவின் அக்கா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் தனுஷிக். இவர் இலங்கையை சேர்ந்தவர். இவருக்கு மீடியாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு தான் சென்னைக்கு வந்தார். பிரபலமான தொகுப்பாளராக வேண்டும் என்பது தான் இவரின் ஆசை.

நீ நான் காதல் சீரியல்:

இதனால் இவர் நிறைய ஆடிசன் போனார். அப்போது தான் இவருக்கு விஜய் டிவியில் 'நீ நான் காதல்' தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் இவர் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். சமீபத்தில் தான் இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இவர் மணி என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். இவர் ஒரு பிசினஸ் மேன். உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக இவர்களுடைய நிச்சயதார்த்தம் நடைபெற்று இருந்தது.

தனுஷிக் நிச்சயதார்த்தம் :

இவர்களுடைய நிச்சயதார்த்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. கூடிய விரைவிலேயே இவர்களுடைய திருமணம் நடைபெற இருக்கிறது. இதை அடுத்து நடிகை தனுஷிக் நீ நான் காதல் சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதற்கு காரணம், தனுஷிக் திருமணம் செய்து கொள்வதும், அவரது வருங்கால கணவர் நடிக்க கூடாது என்று சொல்லிவிட்டதாகவும் பல காரணங்கள் கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் தனுஷிக், டிசம்பர் 27ஆம் தேதி எனக்கு டெங்கு காய்ச்சல் வந்தது. இதனால் நான் ஸ்ரீலங்காவில் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்தேன்.

தனுஷிக் பேட்டி:

கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் தான் இருந்தேன். சீரியல் ப்ரொடக்ஷன் டீம், சேனல் எல்லோருமே எனக்காக வெயிட் பண்ணினார்கள். சீரியல் ட்ராக்கையும் அஞ்சலி மருத்துவமனையில் இருக்கிற மாதிரி எல்லாம் கொண்டு போனார்கள். ஆனால், அதற்கு பிறகும் சில பர்சனல் காரணங்களால் என்னால் வர முடியவில்லை. உடம்பு முழுவதும் குணமாகவில்லை. சீரியல் தரப்பில் வெயிட் பண்ண ரெடியா தான் இருந்தார்கள். ஆனால், எனக்கு அவர்களை வெயிட் பண்ண வைக்க பிடிக்கவில்லை. அதனால் தான் நானே தொடரிலிருந்து விலகிக் கொள்கிறேன் என்று சொன்னேன். என்னோட கோரிக்கையை சேனல் ப்ரோடக்சன் எல்லாருமே ஏற்றுக் கொண்டார்கள்.

https://www.youtube.com/watch?v=A-ozDYA5rwI

சீரியல் விலக காரணம்:

எனக்கு கொஞ்சம் டைம் தேவைப்பட்டது. நான் சீரியலில் இருந்து விலகப் போகிறேன் என்று வீடியோ போட்டதிலிருந்து என்னுடைய மேரேஜ் பற்றியும், என்னுடைய வருங்கால கணவர் பற்றியும் நிறைய நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்து கொண்டிருக்கிறது. என்னுடைய கல்யாணத்திற்கு அவருக்கும் இந்த முடிவுக்கு எந்த சம்மந்தமுமே கிடையாது. இது முழுக்க முழுக்க என்னுடைய தனிப்பட்ட முடிவு. இப்போது நான் ஸ்ரீலங்காவில் தான் இருக்கிறேன். என்னுடைய பர்சனல் கமிட்மெண்ட்ஸ், ஹெல்த் ஆகிய காரணத்தினால் தான் நான் சீரியலில் இருந்து விலகுகிறேன். நான் சீக்கிரமாகவே மீண்டும் சென்னைக்கு வருவேன். வந்ததும் கண்டிப்பாக புது பிராஜெக்ட்டில் உங்களை சந்திக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full