தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி தற்போது திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் அடி எடுத்து வைத்தார். இந்நிலையில் இவர் இயக்கத்தில் சமீபத்தில் “பகாசூரன்” என்ற திரைப்படம் கடந்த 17ஆம் தேதி வெளியானது, இப்படத்தில் செல்வராகவன், நட்ராஜ், கே ராஜன், கூல் சுரேஷ் போன்றவர்கள் நடித்திருந்தனர். இடப்பதில் செல்போன்களினால் ஏற்படும் ஆபத்து குறித்து எடுக்கப்பட்டதாக மோகன் ஜி “பகாசூரன்”படம் வெளியாவதற்கு முன்னர் பேட்டியில் கூறியிருந்தார்.

பிற்போக்கு கருத்துகள் :

இந்நிலையில் இப்படம் அதிகமான எதிர்மறை கருத்துகளை கூறும் படமாக இருக்கிறது எனவும். பெண்கள் சரியாக இருந்தால் அனைத்தும் சரியாக இருக்கும் என்றும், பெண்களையே அணைத்து சுமைகளையும் சுமக்க வேண்டும் என்று இயக்குனர் மோகன் ஜி இப்படத்தை இயக்கியிருக்கிறார். வெளிநாடு போல சென்னை மக்கள் மாறிவிட்டனர், பிள்ளைகள் ரூமுக்குள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும், ஊருக்குள்ளேயே படிக்க வைக்க வேண்டியது தானே போன்ற வசனங்கள் மிகவும் பிற்போக்கு தனமாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் கூறிவந்தனர்.

Advertisement

மோகன் ஜி பேட்டி :

இந்நிலையில் சமீபாத்தில் பேட்டி ஒன்றில் பேசிய மோகன் ஜி கூறுகையில் “ஆன்லைன் செயலிகள் மூலம் பாலியல் குற்றங்கள் நடைபெறுவது தனக்கு தெரிந்தது என்றும் அதனை படமாக்க தானே அந்த இடத்திற்கு வாடிக்கையாளராக சென்று காவல்துறை மற்றும் பத்திரிகையாளர்கள் உதவியுடன் அங்கே இருந்த பெண்களை மீட்டதாகவும் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் மோகன் ஜி. மேலும் இது போன்ற ஆன்லைன் பாலியல் குற்றங்கள் பெண்களின் வாழ்க்கையை சீரழிப்பதாகவும், இது போன்ற விஷியத்தில் பலர் பணத்தை இழந்துள்ளனர் என்று அவர் கூறினார்.

படத்தை எடுத்த காரணம் :

மேலும் செல்போன்களை நம்முடைய பிள்ளளைகள் நல்லவற்றை அறிந்து கொள்ள பயன்படுத்துகிறார்கள் என்று தான் நினைப்போம். பலர் நல்லவற்றிக்காகத்தான் பயன்படுத்துகின்றனர் ஆனால் சிலர் பணம் சம்பாதிக்கும் கேம், சில மிரட்டல்களினால் பயந்து இந்த வகையான குற்றங்களை செய்வதாகவும் மோகன் ஜி கூறினார். எனனே இந்த விஷயம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவே “பகாசுரன்” படத்தை எடுத்ததாகவும் கூறினார் இயக்குனர் மோகன் ஜி.

Advertisement

VJ லயா பேட்டி :

இந்நிலையில் “பகாசூரன்” படத்தில் நடித்த லயாவிடம் இது உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டதா என பேட்டி ஒன்றில் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகை லயா கூறுகையில் “அது உண்மைதான், இயக்குனர் மோகன் ஜி என்னிடம் கதையை சொல்லும் போதே இந்த விஷயம் பற்றிய கூறினார். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் எல்லா பத்திரிகைகளிலும் இந்த விஷயம் குறித்து வெளிச்சம் போட்டு காட்டப்போட்ட ஒரு பெண்ணின் கதாபாத்திரம் தான் இது.

Advertisement

அந்த பெண்ணின் பெயர் :

படத்தில் நடந்த விஷயம் உண்மையிலேயே நடந்தது தான். அந்த பெண் ஒரு ஹாஸ்டல் வாடனாக இருந்தார். அதற்கு பிறகுதான் இந்த குற்றத்திற்கு போலீஸில் கைதாகி மீண்டும் ஜாமினில் வந்தார். பின்னர் அது வேறு கதையாக மாறிவிட்டது. அவரது பெயர் கூட சு அல்லது எஸ் என தொடங்கும் என்று நினைக்கிறன். அந்த பெண்ணின் கதாபாத்திரத்தை தான் நான் என்று இப்படத்தில் நடித்துள்ளேன் என்று அந்த பேட்டியில் கூறினார் லயா. விஜே லயா சமீபத்தில் சோசியல் மீடியா பிரபல பயில்வான் ரங்கநாதனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் சோசியல் மீடியா முழுவதும் பேசப்பட்டு பிரபலமாகி தற்போது நடிகையாகியிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

Advertisement