ஓராண்டுக்கு முன்பே 2வது திருமணம் செய்துள்ள மஹாலக்ஷ்மியின் முதல் கணவர்.

By subhashini · 8/9/2022

இரண்டாவது திருமணத்திற்கு பிறகு முதன் முதலாக தன்னுடைய முன்னாள் கணவர் குறித்து சீரியல் நடிகை மகாலட்சுமி அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி . இவர் நடிகை மட்டும் இல்லாமல் பல நிகழ்ச்சிகளில் ஆங்கர் ஆகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான்.

படிப்பு முடிஞ்சதும் இவர் சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக மீடியாவிற்குள் நுழைந்தார். அதற்கு பிறகு தான் இவருக்கு சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் அரசி என்ற சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்குள் நுழைந்தார். அதற்கு பின் மகாலட்சுமி 10 வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரையில் முத்திரையைப் பதித்து வருகிறார். இதனிடையே இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அனில் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மகாலட்சுமி முதல் திருமணம்:

இவர்களுக்கு சச்சின் என்ற ஆறு வயது மகனும் இருக்கிறார். இப்படி ஒரு சூழ்நிலையில் தான் சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டு காரணமாக அனில்- மகாலட்சுமி இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். தன்னுடைய மகனுடன் மகாலட்சுமி தனியாக தான் வாழ்ந்து வருகின்றார். பின் தொடர்ந்து மகாலட்சுமி சீரியல் நடித்து வருகிறார். சன் டிவி, ஜீ தமிழ் என பிரபலமான சேனல்களில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்து வருகிறார்.

மகாலட்சுமி நடிக்கும் சீரியல்:

இடையில் சீரியல் நடிகர் ஈஸ்வரனுடன் மகாலட்சுமி தொடர்பு இருப்பதாக ஈஸ்வரனின் மனைவி ஜெயஸ்ரீ புகார் அளித்திருந்தார். இது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை கிளப்பியிருந்தது. அப்போது கூட மகாலட்சுமியின் முதல் கணவர் அனில் செய்தியாளர்களை சந்தித்து தங்களோடு திருமண வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார். அதற்குப்பின் மகாலட்சுமி தன்னுடைய கேரியலில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் வில்லியாக மிரட்டிக்கொண்டு வருகிறார்.

மகாலட்சுமி இரண்டாவது திருமணம்:

இந்த நிலையில் மகாலட்சுமி இரண்டாவது ஆக தயாரிப்பாளர் ரவீந்திரதை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். கடந்த வாரம் தான் இவர்களுடைய திருமணம் நடந்தது. இவர்களுடைய திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து பலருக்கும் ஷாக் என்று சொல்லலாம். மேலும், இவர்களுடைய திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்ததை விட பலரும் விமர்சனம் தான் செய்திருந்தார்கள். இந்நிலையில் இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் மகாலட்சுமி- ரவிந்தர் இருவரும் பல நேர்காணல்களில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார்கள்.

முன்னாள் கணவர் குறித்து கூறியது:

அப்போது மகாலட்சுமி தன்னுடைய முன்னாள் கணவர் குறித்து கூறியிருந்தது, என் முன்னாள் கணவருக்கு ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் ஆகிவிட்டது. ஆனால், இது பலருக்குமே தெரியாது. அவர் இப்போது தனக்கான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதை நினைத்து எனக்கு சந்தோஷமாகத்தான் இருக்கிறது. நான் முதலில் கல்யாணமே வேண்டாம் என்று தான் நினைத்தேன். இருந்தாலும், என் மகன் சச்சினுக்காக நல்ல மனிதரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நினைத்தேன். கடைசியில் அது நடந்தது. எனக்கு ரவீந்திர் கிடைத்தது நான் செய்த பாக்கியம் என்று கூறியிருந்தார்.

behindtalkies AMP · Quick view
View full