ஒரு மகனுக்கு தாய் தானே ? எதற்காக இப்படி ? நல்லா தானே இருந்தீர்கள் - மகேஸ்வரிக்கு அட்வைஸ் செய்த ரசிகர்.

By Rajkumar · 7/7/2020

தொலைக்காட்சிகளில் வரும் தொகுப்பாளர்கள் சிலர் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகிறார்கள். அதிலும் குறிப்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சன் நியூஸ் தொலைக்காட்சியில் வந்த தொகுப்பாளர்கள் தற்போதும் ரசிகர்கள் மறக்காமல் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் பிரபல பெண் தொகுப்பாளினியான மகேஸ்வரியும் ஒருவர். மகேஸ்வரி தொகுப்பாளினியாக அறிமுகமானது சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தான்.

https://twitter.com/CSathyamoorthy/status/1279720881422385152

அதன் பின்னர் இசைஅருவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார் இடையில் திருமணம் ஆனதால் பிரேக் எடுத்துக்கொண்ட மகேஸ்வரி ஒரு குழந்தைக்கும் தாயானார் அதன் பின்னர் மீண்டும் தொலைக்காட்சியில் பணிபுரிய தொடங்கினார் மேலும் இவர் தாயுமானவன் புதுக்கவிதை போன்ற ஒரு சில சீரியல்களில் கூட நடித்திருக்கிறார்.

மேலும், குயில், மந்திர புன்னகை, சென்னை 28 -2 போன்ற படங்களில் கூட நடித்திருக்கிறார் மகேஸ்வரி.திருமணம் முடிந்து ஒரு குழந்தைக்கு தாயான நிலையில் மகேஸ்வரி தற்போது தன் மகன் மற்றும் தன் தாய்வீட்டாருடன் வசித்து வருகிறார்.தற்போது இன்டெபெண்டண்ட் தாயாக வாழ்ந்து வரும் ஜி தமிழ்’ சேனலில் ‘பேட்டராப்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியை மகேஸ்வரி, தீபக் இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

https://twitter.com/maheswarichanak/status/1279816463931437056

சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் மகேஸ்வரி சமீபகாலமாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கூட புடவையில் போட்டோஷூட் நடத்தியிருந்தார். அதற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ் வந்தது. ஆனால், ரசிகர் ஒருவர்,கேட்டால் என் விருப்பம் .. என்று கூறுவீர்கள் !!அதற்காக இப்படியா...? மார்பகங்கள் தெரியும் அளவுக்கு? நீங்கள் ஒரு தாய் என்பதை மறாவதீர்?உங்களின் ரசிகானகா என் ஆதங்கம் என்று மகேஸ்வரிக்கு அட்வைஸ் செய்திருந்தார்.

அந்த ரசிகருக்கு மகேஸ்வரியின் ரசிகர் ஒருவர், அந்த ரசிகர் கவர்ச்சி புகைப்படங்களை லைக் செய்திருப்பதை குறிப்பிட்டு, நீங்க அவ்ளோ ஒழுங்கா இருந்தா இது லைக் பண்றீங்க. நடிகைகள் அப்படி இருந்தா திறமை? இவங்க அப்படி பண்ணா தப்பா? மகேஸ்வரி நம்பிக்கையுடன் இதை பகிர்ந்திருக்கிறார். எனவே, கொஞ்சம் யோக்கியம் வேஷம் போடாமல் இருந்தால் சரி என்று பதிவிட்டிருந்தார். அதற்கு மகேஸ்வரி நன்றி தெரிவித்து எமோஜி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full