என்ன அக்கா கர்பமா இருக்கீங்களா - மணிமேகலையின் லேட்டஸ்ட் வீடியோவை கண்டு ரசிகர்கள் கமெண்ட்ஸ்

By Rajkumar · 16/5/2023

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்று சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

View this post on Instagram

A post shared by Mani Megalai (@iammanimegalai)

அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி டாப் ரேட்டிங்கில் இருக்கிறது. இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற காரணமே கோமாளிகள் தான். அதிலும் இந்த நிகழ்ச்சியில் புகழ், குரேஷி, பாலாவிற்கு அடுத்தபடியாக மணிமேகலை தான் காமெடியில் கலக்கி வந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகி இருப்பதாக அறிவித்து இருந்தார்.

வெளியேறிய மணிமேகலை :

இதுகுறித்து அறிவித்து இருந்த அவர் ' 'இன்று குக் வித் கோமாளியில் என்னுடைய கடைசி எபிசோடு. ‘நான் வரமாட்டேன்’ என நானே வருவேன் கெட்டப்பில் அறிவிக்கிறேன்.2019ல் தொடங்கிய முதல் சீசனில் இருந்து நீங்கள் எனக்கு குக் வித் கோமாளிக்காக அதிக அளவு அன்பை பொழிந்துகொண்டிருக்கிறீர்கள். அதற்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.எனக்கு கொடுக்கப்படும் வாய்ப்புகளில் நான் எப்போதும் பெஸ்ட் ஆக இருக்க அதிக அளவு efforts போட்டிருக்கிறேன்.

ரசிகர்கள் வருத்தம் :

குக் வித் கோமாளியின் உங்களை entertain செய்ய கொஞ்சம் justice செய்திருக்கிறேன். உங்களிடம் இருந்து எதிர்பார்க்காத அளவுக்கு அன்பு கிடைத்தது, அது நான் செய்யும் மற்ற விஷயங்களிலும் இருக்கும் என நம்புகிறேன் ' என்று பதிவிட்டு இருந்தார். மணிமேகலையின் இந்த பதிவை கண்ட ரசிகர்கள் பலரும் சோகத்தில் ஆழ்ந்தனர். மேலும், அவர் கர்ப்பமாக இருப்பதால் தான் வெளியேறினார் என்றும் கூறி வந்தனர்.

கர்ப்பமாக இருப்பது குறித்து விளக்கம் :

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் மணிமேகலை வெளியிட்ட வீடியோவில் அவர் குண்டாக இருப்பதை கண்டு ரசிகர்கள் பலரும் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்று மீண்டும் கேட்கத்துவங்கிவிட்டனர். ஏற்கனவே இன்ஸ்டாவில் ரசிகர் ஒருவர் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்று கேள்வி கேட்டு இருந்தார். அதற்கு பதில் அளித்த மணிமேகலை 'அது வெறும் வதந்தி தான். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை நானே சொல்வேன்' என்று கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full