அது முடிஞ்சு போன சேப்டர், தொகுப்பாளினி மணிமேகலை சொன்ன பளிச் பதில் - எதுக்கு தெரியுமா?
பிரியங்கா உடனான சண்டை பற்றி மணிமேகலை அளித்து இரக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் மியூசிக்கில் ஒரு காலத்தில் பிரபலமான விஜேவாக வலம் வந்தவர் மணிமேகலை. அதன் பின் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் தனது பேச்சால் மக்கள் மத்தியில் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வருகிறார். இதனால் இவருக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது.
இதனிடையே மணிமேகலை- உசேன் நீண்ட வருடமாக காதலித்து வந்தார்கள். ஆனால், இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதிக்காததால் பெற்றோர்களின் எதிர்ப்புகளை மீறி இருவரும் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார்கள். மணிமேகலை திருமணத்திற்கு பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மணிமேகலை பிரபலம் அடைந்தார்.
மணிமேகலை குறித்த தகவல்:
முதலில் அந்த நிகழ்ச்சியில் கோமாளியாக வந்த இவர் பிறகு, ‘குக் வித் கோமாளி சீசன் 5’ நிகழ்ச்சியை ரக்ஷனோடு சேர்ந்து தொகுத்து வழங்கினார். மேலும், அந்த சீசனில் போட்டியாளராக இருந்த தொகுப்பாளினி பிரியங்காவுடன் ஏற்பட்ட சர்ச்சையால் அந்த நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகினார். இவர்கள் பஞ்சாயத்து மிக பெரிய அளவில் வைரலாகி இருந்தது. அதன் பின் இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
மணிமேகலை பேட்டி:
சமீபத்தில் தான் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி முடிவடைந்தது. இந்த நிலையில் நிகழ்ச்சிக்கு பின் அளித்த பேட்டியில் தொகுப்பாளர் மணிமேகலை, ஜீ தமிழ் நிகழ்ச்சிகள் இதற்கு முன்னாடி பண்ணியது இல்லை. அதனால ஆரம்பத்திலேயே சின்னதாக யோசித்தேன். ஆனால், ஒரு பெரிய சண்டை சச்சரவுக்கு பிறகு ஒரு வாய்ப்பு வருது என்றால் நிச்சயம் அது நமக்கு நல்லதாக இருக்கும் என்று என் மனதிற்கு தோன்றியது.
நான் எப்பவுமே என் உள் மனதை சொல்வதை அப்படியே கேட்பேன். அதனால் பண்ணலாம் என்று முடிவெடுத்தேன்.
தொகுப்பாளர் அனுபவம்:
டிஜேடி அனுப்பவம்ஆறு மாதம் போயிருக்கும். ரொம்ப நன்றாக இருந்தது வேலை அனுப்பவம். ரொம்ப நன்றாக இருந்தது. என் வேலையை சுதந்திரமாக முழு ஈடுபாட்டோடு செய்தேன். நல்ல ரெஸ்பான்ஸ் நிகழ்ச்சி போய்க் கொண்டிருக்கும்போதே வேலைக்கான அங்கீகாரம் கிடைத்தது. சில அமைப்புகளிடமிருந்து எனக்கு சிறந்த தொகுப்பாளர் விருது கிடைத்தது. இப்ப நிகழ்ச்சி முடித்துவிட்டாலும் அடுத்த ஷோ குறித்த பேச்சுகள் போய்க் கொண்டிருக்கிறது.
பிரியங்கா பற்றி சொன்னது:
அடுத்த சில தினங்கள் அது பத்தின முறையான அறிவிப்பும் வரும். இந்த வேலைக்கு வந்து 16 வருடம் ஆகிவிட்டது. ரொம்பவே பிடித்த வேலை. அதனால் இதை மட்டும் எவ்வளவு காலம் முடியுதோ அதுவரை செய்யலாம் என்று இருக்கிறேன். எதுக்கு இன்ட்ரஸ்ட் இல்லாத ஒரு இடத்துக்கு பஸ் ஏறனும்? சண்டைக்கு பின் பிரியங்கா உடன் பேசுகிற சூழல் ஏற்படவில்லை. அதோடு என்னைப் பொறுத்தவரை அது முடிந்து போன சேப்டர் என்று கூறியிருக்கிறார்.