Survivorல நான் Tough Contestantஆ இருந்ததால என்ன எதிர்பாக்குறாங்க - பிக் பாஸில் கலந்துகொள்வது குறித்து Vj பார்வதி

By Arun · 16/11/2022

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன்6 தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளு அளவிற்க்கு சம்பவங்கள் நடந்து வருகிறது. மேலும் பிக் பாஸ் ரசிகர்கள் போட்டியாளர்களுக்கு தரும் ஓட்டின் அடிப்படையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் எலிமினேஷன் செய்யப்படுவர். இந்நிலையில் ஏற்கனவே ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, செரீனா போன்றவர்கள் வெளியேறிய நிலையில் போட்டியாளர்கள் கவனமாக விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் தான் கடந்த வாரம் எலிமினேஷனில் யாருமே எதிர்பார்க்காத வகையில் மகேஸ்வரி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இவர் வெளியேறியது பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு அதேபோல ரசிகர்களுக்கும் பெரிய ஏமாற்றமாக இருந்தது. ஏனென்றால் இவர் பிக் பாஸ் வீட்டில் நன்றாக விளையாடியது மட்டுமில்லாமல், பல கண்டாண்டுகளையும் கொடுத்திருந்தார் மேலும் கடந்த வாரம் முழுதும் தனியாக பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு சமைத்து போட்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது. இன்றும் சில பூமர் குழு மிக்சர் சாப்பிட்டு கொண்டிருக்க இவர் வெளியேறியது பலருக்கும் வருத்தமாகத்தான் இருந்தது.

அடுத்தது யார்? :

ஏற்கனவே பிக் பாஸ் வீட்டின் நல்ல போர்ட்டியாளர்களான ஜி.பி.முத்து மற்றும் மெட்டிஒலி சாந்தி போன்றவர்களை இழந்த நிலையில் தற்போது மகேஸ்வரியும் பிக் பாஸ் வீட்டை விட்டு எலிமினேஷன் ஆகியுள்ளார். இந்நிலையில் வீட்டில் விறுவிறுப்பு குறையாமல் இருக்க யாரை உள்ளே அனுப்பலாம் என்று திட்டம் திட்டி கொண்டிருப்பதாகவும். இதற்காக பல பிரபலங்களை பிக் பாஸ் நிர்வாகிகள் அணுகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

அடுத்த வைல்ட் கார்டு இவரா ?:

இத்தகைய நிலையில்தான் பிக் பாஸ் வீட்டில் அடுத்த எலிமினேஷன் யார் என்றிருக்கும் போது இரண்டாவது வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிரபல தொகுப்பாளர் மற்றும் நடிகையான பார்வதி வரப்போவதாக தகவல் சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி வளர்ந்து வரும் இவர் பிரபல ஜி தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்ற "சர்வ்வய்வர்" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கெத்து காட்டினார். அது மட்டும் இல்லாமல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த பார்வதி தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

பதிலளித்த பார்வதி :

இது குறித்து பிரபல செய்தி சேனல் தொகுப்பாளர் நடிகை விஜே பார்வதியுடன் தொலைபேசியில் கேட்டிருந்தனர். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நிர்வாகிகள் யாரும் தன்னிடம் எந்த தகவலையும் சொல்ல வில்லை என்றும், ஒருவேளை தன்னை அழைத்திருந்தார் கலந்து கொள்வதை பற்றி யோசிக்கலாம் என்றும் கூறியிருந்தார். மேலும் சோசியல் மீடியாக்களில் அந்த செய்திகளை பார்த்ததாகவும் அதில் கூறப்பட்டது போல தன்னுடைய வயது 26 இல்லை 25 எனவும் ,தன்னை சென்னை பொண்ணு என்று தவறாக கூறுகிறார்கள்.

https://www.youtube.com/watch?v=4SDf8NY5ioA&t=39s

பிடித்த போட்டியாளர்கள் :

நான் மதுரை பொண்ணு என்று கூறினார். செய்தியாளர் உங்களுக்கு பிடித்த போட்டியாளர் இந்த நிகழ்ச்சியில் யார் என கேட்டபோது எனக்கு விக்ரமனை பிடித்திருக்கிறது என்று கூறிய பார்வதி` அவருடன் ஏற்கனவே பழகிய அனுபவத்தினால்தான் இதனை கூறுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், பிக் பாஸ் வீட்டில் கதிர் மிகவும் அழகாக இருக்கிறார் என்றும் கூறியுள்ள பார்வதி சர்வைவரில் tough contestantஆ இருந்ததால என்னை பலர் எதிர்பார்க்குறாங்க. மேலும், தனலட்சுமிக்கு நான் Tough contestantஆ இருப்பானா தெரியாது பிக் பாஸில் ஒரு Tough Contestantஆ இருப்பேன்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full