Condom பற்றியும் Virginity பற்றியும் கேட்ட பார்வதி - திருப்பி ஷகீலா கேட்ட நெத்தியடி கேள்வி.

By Rajkumar · 7/3/2021

மலையாள சினிமாவில் கவர்ச்சி நடிகையாக இருந்த ஷகீலா சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற போது என்னை போல் யாரும் ஏமாந்து விடாதீர்கள். அதைத்தான் என் புக்கில் எழுதி இருக்கிறேன். இதைத்தான் படமாக எடுத்து இருக்கிறார்கள். பெண்களுக்கு மேசேஜாக இந்த திரைப்படம் இருக்கும் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் Vj பார்வதியின் பேட்டி ஒன்றில் பேசிய ஷகீலாவிடம், கமன்ட்டில் ரசிகர்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது நீங்கள் என்ன வேண்டுமானாலும் நியாயப் படுத்திக் கொள்ளலாம் ஆனால் பணத்திற்காக நீங்கள் செய்தது தவறுதான் நீங்கள் நிறுத்தி இருக்க வேண்டும் என்று கூறுகிறயதாய் பார்வதி படித்துக் காட்டினார்.

https://twitter.com/peru_vaikkala/status/1368121852363640835

இந்த கேள்வியால் கடுப்பான ஷகிலா உனக்கு என்ன பிரச்சனை நீ எனக்கு பணம் தர போகிறாயா நான் வாழ வேண்டும் நான் தான் ஒரு குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டும் எனக்கு உதவி செய்வார்கள் இது என்னுடைய உடல் அதை நான் காட்டினேன் அதுவும் என்னுடைய மற்றவர்களை காப்பாற்றுவதற்காக என்னுடைய சம்மதத்துடன் தான் அதை செய்தேன் என்று நெத்தியடி பதில் கொடுத்திருக்கிறார்.

இதையும் பாருங்க : பூவே உனக்காக படத்தில் பணியாற்றியவரையே திருமணம் செய்து கொண்ட சங்கீதா. அட, இவரு சிம்பு பட இயக்குனராச்சே.

அதேபோல மற்றொரு ரசிகர் ஒருவர் நீங்கள் உடல் எடையைக் குறைத்தால் அழகாக இருப்பீர்கள் என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ஷகிலா நான் ஒடம்ப கொறச்சா என்ன ஹீரோயினியாக கூப்பிட போறாங்க. எனக்கு 43 வயசு ஆகுது இப்ப நான் ஹீரோயினா நடிக்க முடியாது, அப்புறம் எதற்காக நான் கஷ்டப்பட்டு ஜிம்முக்கு போய் லோ லோ லோன்னு உடம்பை கம்மி பண்ணனும் அதனால் நான் இப்படியே இருந்து விட்டு போகிறேன் என்று கூறினார்.

வீடியோவில் 14 : 30 நிமிடத்தில் பார்க்கவும்

https://www.youtube.com/watch?time_continue=894&v=Kdt4fT7egtg&feature=emb_title

இறுதியாக பார்வதி ஷகிலாவிடம் உங்களுடைய அகராதியில் Virginity (கன்னித்தன்மை) என்றால் என்ன என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ஷகிலா Virginity (கன்னித்தன்மை) என்றால் என்னனு நீ சொல்லு என்று திருப்பி பார்வதியிடமே கேட்டார். அதற்கு பதில் அளித்த பார்வதி, மற்றவர்களைப் பொருத்தவரை கன்னித் தன்மையை இழப்பது தான் Virginity (கன்னித்தன்மை) என்று சொல்கிறார்கள். என்னை பொருத்தவரை மனதாலும் உடலாலும் எப்போது நாம் அனைத்தையும் இழக்கிறோமோ அதுதான் Virginity (கன்னித்தன்மை) இழப்பது என்று அர்த்தம் என்று கூறியதற்கு பதில் அளித்த ஷகீலா, அது உடல் சார்ந்த விஷயம்தான் என்று சொன்னால் நன் 15 வயசுல ஒரு ஷாருக்கான் படம் பார்த்தேன்.

அதில் ஷாருக்கானை பார்த்தவுடன் அவர் மீது எனக்கு லைக் ஏற்பட்டுவிட்டது நீ சொன்ன மாதிரி அப்போ நான் என் என் கன்னித்தன்மையை இழந்து விட்ட கணக்கு தான் நம்முடைய புராண காலத்து கணக்கு. அந்த காலத்தில் அப்படித்தான் இருந்தார்கள் ஆனால் அப்படி கிடையாது. பெண்களால் கட்டுப்படுத்த முடிவது கிடையாது. எங்கே பெத்தவங்க பேச்ச கேக்குறாங்க ஆனால் பாதுகாப்பாக இருப்பது தவறு கிடையாது. பாதுகாப்பாக இருங்கள் என்று தன்னுடைய ஸ்டைலில் பதில் அளித்துள்ளார் ஷகீலா.

Tamil Behind Talkies AMP · Quick view
View full