Anchoring ஒரு பக்கம் Youtube ஒரு பக்கம் - புதிய காரை வாங்கிய vj பாரு. விலை எத்தனை லட்சம் தெரியுமா ?

By Rajkumar · 22/2/2023

தற்போது இருக்கும் காலகட்டத்தில் டிவி தொகுப்பாளினிகளுக்கு இணையாக யூடுயூப் தொகுப்பாளர்களும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில் தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்தவர் விஜவும் தொகுப்பாளினியுமான Vj பார்வதி. இவர் கலாட்டா என்ற தனியார் யூடியூப் சேனலில் ஜாக்கி ஆக பணிபுரிந்தார். இவர் விஜே மட்டுமில்லாமல் மாடல் மற்றும் ஜர்னலிஸ்ட் ஆவார். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்துக்கும் மேலாக ஃபாலோவர்ஸ் உள்ளார்கள்.

பார்வதி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது என்னவோ ஹிப் ஹாப் ஆதி மூலம் தான். கடந்த ஆண்டு ஹிப் ஹாப் நேர்காணல் கொடுத்து இருந்தார். அந்த நிகழ்ச்சியை ஆர்.ஜே.பார்வதி அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். இதில் ஹிப் ஹாப் தமிழா ஆதி அவர்கள் தன்னுடைய பழைய நினைவுகள் விஷயங்களையும், நடந்திருக்கும் விஷயம் , எதிர்காலத்தில் நடக்கும் விஷயம் என பல விஷயங்களைப் பற்றியும் அவர் பகிர்ந்து கொண்டார்.

பார்வதியும் கேலிகளும் :

அப்போது பார்வதி அவர்கள் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஆண்ட்டி(aunty) பார்த்து சைட் அடித்து இருக்கிறீர்களா?? என்று கேட்டார். " உங்களைப் பார்ப்பதுக்கு முன்னாடி வரை யாரும் இல்லை" என்று சொன்னார். இதனால் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோவை போட்டு பல மீம்ஸ்களை போட்டு வந்தனர். அப்போது முதல் இவரை பலரும் ஆன்டி என்று தான் அழைத்து வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=5QPWTYZgjiY

அதே போல இவரை பலரும் மியா கலீபாவுடன் ஒப்பிட்டு வருகின்றனர். இப்படி இவர் குறித்து பல விதமான கேலிகள் இருந்தாலும் அதை மிகவும் எளிதாக கடந்து சென்றுவிடுகிறார் பாரு. யூடுயூப் பேட்டிகள் மூலம் பிரபலமடைந்த பார்வதிக்கு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் கூட வாய்ப்புகள் கிடைத்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று இருந்தார்.

குக்கு வித் கோமாளி முதல் சர்வைவர் :

அதே போல சிவகுமாரின் சபதம் படத்தின் மூலம் சினிமாவிலும் அறிமுகமாகி இருந்தார். மேலும், கடந்த ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபாரப்பான 'சர்வைவர்' நிகழ்ச்சியில் கூட போட்டியாளராக பங்கேற்று இருந்தார். இந்த நிகழ்ச்சியிலும் சர்ச்சைக்குரிய போட்டியாளராக திகழ்ந்தார். இதனை தொடர்ந்து பல டிவி நிகழ்ச்சிகள், மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

புதிய கார் :

சிவகுமாரின் சபதம் படத்தை தொடர்ந்து ஒரு சில படங்களில் கமிட் ஆகி இருக்கிறார் பார்வதி. அதே போல இவர் vibe with paaru என்ற யூடுயூப் பாகத்தை நடத்தி வருகிறார். இதில் அடிக்கடி வீடியோக்களை பதிவிட்டு வரும் பார்வதி சமீபத்தில் புதிய கார் ஒன்றை வாங்கி இருக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இவர் வாங்கி இருக்கும் காரின் பெயர் Jeep Compass என்ற காராகும் மேலும் இதன் ஆரம்ப ex show room விலையே 20 லட்சத்திற்கும் மேல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full